Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழ்க்கைப் பயணம் என்பது, இன்பம் துன்பம் கலந்ததாக அமைந்துள்ளது. இன்ப, துன்பத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளிலும் பணத்தின் பாவனை முக்கிய இடத்தை வகிக்கிறது.
இலங்கையில் பணத்தின் பாவனையானது நாணயத்தாள்கள் மற்றும் நாணயக்குற்றிகள் வடிவில் அமைந்துள்ளன. பிரதான நகரங்களில் தற்போது கடன் அட்டைகள், பற்று அட்டைகள் மற்றும் காசோலைகள், அலைபேசி மற்றும் கொடுப்பனவுகள் ஊடாக நடைபெறுகின்றன.
இருந்த போதிலும், காலையில் எழுந்து தொழிலுக்கு செல்வது முதல், இரவு உறக்கத்துக்கு செல்லும் வரை நாம் வெ்வவேறுதேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்காக நாணயத்தாள்களைப் பயன்படுத்துகிறோம்.
இந்த நாணயங்கள் எந்தளவுக்கு தூய்மையானவை என்பது, பெரும்பாலான சந்தரப்பங்களில் அவற்றின் புறத்தோற்றத்திலிருந்தும், அவற்றை நாம், எந்தச் சூழ்நிலையில் பெற்றுக்கொள்கிறோம் என்பதிலும் தங்கியுள்ளது. குறிப்பாக, சந்தைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் வாகன பழுதுபார்ப்பு நிலையங்களிலும் நாணயத்தாள்கள் பாவனையின் போது அவற்றின் மீது எண்ணெய் வகைகள், துணிக்கைகள் படிவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
நாம் பயன்படுத்தும் நாணயங்களின் தூய்மையைப் பேணுமாறு, இலங்கை மத்திய வங்கியினால் வெவ்வேறு விழிப்புணர்வுப் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நாணயத்தாள்களை கசக்குவது, அவற்றில் குறிப்புகளை எழுதுவது, அவற்றை அசுத்தப்படுத்தும் போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, அந்தப் பிரசார செயற்பாடுகள் அறிவுறுத்துகின்றன. குறிப்பாக இவ்வாறான அறிவுறுத்தல் பஸ் நடத்துநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி செலுத்துநர்களுக்கும், சிறியளவிலான வியாபாரிகளுக்கும் அதிகளவு இலக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாணயத்தாள்களைப் பயன்படுத்திய பின்னர், தமது கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்வது என்பது முக்கியமான தேவையாக அமைந்துள்ளது. குறிப்பாக நெடுந்தூரம் பயணம் செய்கையில் இந்த விடயம் குறித்து பாவனையாளர்கள் அவதானம் செலுத்த வேண்டும்.
புதுவிதமான நோய்கள் நாட்டில் பரவி வரும் நிலையில், இந்த நாணயத்தாள்களும் ஒருவிதமான நோய்க்காவிகளாகவேப் பார்வையிடப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. அவதானமாக செயற்பட்டு நோய்த்தொற்றுக்களிலிருந்து எம்மையும், எம் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்வோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .