Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 28 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, நியுசிலாந்து தேன் நிறுவனத்துடன் இணைந்து 'மனுகா தேன்| மற்றும் இதர தேன் தயாரிப்புகளை இலங்கையின் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
நியுசிலாந்து தேன் கம்பனியினால் சிறந்த தேன் உற்பத்திகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம், இலங்கை மற்றும் மாலைதீவுகளில் தனது விற்பனை முகவராக ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனியியை 2015 முதல் நியமித்திருந்தது.
மனுகா தேன் உற்பத்தி என்பது, இயற்கை ருஆகு 510 மற்றும் ருஆகு 1010 ஆகியவற்றை கொண்டுள்ளது. இவை தேனீக்கள் மனுகா பூக்களிலிருந்து மட்டும் சேகரிக்கும் இயற்கை சேர்மானமாகும். மனுகா பூக்களில் பெறுமதி வாய்ந்த சேர்மானங்கள் காணப்படுவதுடன், அவற்றை வேறு எந்த பூக்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியாது.
இருதய கோளாறுகள், புற்றுநோய் மற்றும் வயிற்றுக்கோளாறு போன்றன ஒரு வகை நுண் அங்கிகளால் தோற்றுவிக்கப்படுகின்றன. மனுகா தேன் என்பது இந்த நுண் அங்கிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மனித ஆற்றலை மேம்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது.
மனுகா தேன் என்பது உயர் ஆயுர்வேத உள்ளடக்கங்களையும் தரங்களையும் கொண்டுள்ளது. இதன் பாவனையின் மூலமாக பார்வைத்திறன் மேம்படுத்தவும், உடல் எடையை குறைத்துக்கொள்ளவும், ஆஸ்துமா மற்றும் டயரியா போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், வயிற்றுக்குடல் சார்ந்த குறைபாடுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அழகியல்சார் பயன்பாட்டுக்கும் தரமான தேன் என்பது அவசியமாகிறது. மனுகா தேன் என்பது விசேட ஆயுர்வேத குண அம்சங்களைக் கொண்டதுடன், சலோன்களில் அழகியல் தேவைகளுக்காக பயன்படுத்தவும் உகந்தது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago