2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துப் பாற்பண்ணையாளர்கள் உதவி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் ஃபொன்டெரா பாற்பண்ணையாளர்கள் தன்னார்வ அடிப்படையில் இலங்கைக்கு விஜயம் செய்து, உள்நாட்டு பாற்பண்ணையாளர்களுடன் தமது அறிவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துக் கொண்டனர். ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்காவின் புதியப் பாற்பண்ணையாளர் தன்னார்வ செயற்பாட்டு திட்டத்தினடிப்படையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் சேதி கருத்துத் தெரிவிக்கையில், 'தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த புள்ளிவிவரங்களின் (2014) பிரகாரம் இலங்கையின் மொத்த உள்நாட்டு பால் உற்பத்தி கேள்வியில் 35 - 40 சதவீதமாக அமைந்துள்ளது. பாற்பண்ணைத்துறையில் 100 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட பாற்பண்ணைக் கூட்டுத்தாபனம் எனும் வகையில், இந்த இடைவெளியை நிரப்பிக் கொள்ள உதவ நாம் கவனம் செலுத்துகிறோம்' என்றார்.

சேதி கருத்து தெரிவிக்கையில், 'உயர் தரம் வாய்ந்த பால் உற்பத்தி எனும் போது, எமது பாற்பண்ணையாளர்கள் உலகத்தலைவர்களாக திகழ்கின்றனர். பாற்பண்ணைத்துறையில் பல தலைமுறையாக இவர்கள் கட்டியெழுப்பிய நிபுணத்துவத்துடன் இவர்களின் அறிவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, எமது இலங்கையின் பாற்பண்ணையாளர்களுடன் அறிவை பகிர்ந்து கொள்வதன் மூலமாக, அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது நோக்காக அமைந்துள்ளதுடன், அதன் மூலம் அதிகளவு நிலைபேறான துறையை உருவாக்குவது நோக்கமாகும்' என்றார்.

அங்கரின் பாற்பண்ணை கூட்டுத்தாபனத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, நியூசிலாந்து பாற்பண்ணையாளர்கள், பாற்பண்ணைகளுக்கு விஜயம் செய்து, சிறந்த விலங்கு போசணை, விலங்குகளின் சுகாதாரத்தை மேம்படுத்தல், பால் உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பண்ணையை வியாபாரமாக எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது போன்ற விளக்கங்களை வழங்கியிருந்தனர்.

விஜயம் செய்திருந்த பாற்பண்ணையாளர்களில் ஒருவரான டிம் பிலிப்ஸ் கருத்து தெரிவிக்கையில், 'எம்மைப் போலவே, நாம் இங்கு சந்தித்த பெருமளவான பாற்பண்ணையாளர்கள் தமது விலங்குகளை சுகாதாரமாக பேணுவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றனர் அத்துடன் பாற்பண்ணைச் செய்கை தொடர்பில் உரையாட அதிகம் விருப்பம் காண்பிக்கின்றனர். பெருமளவானோர் தமது குடும்பத்துக்கும், தமது குழந்தைகளுக்கும் சிறந்ததை பெற்றுக் கொடுக்க அதிகளவு ஈடுபாட்டைக் காண்பிக்கின்றனர். எனவே நாம் கொண்டுள்ள மதிப்பு பொதுவானதாக உள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X