2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

நாட்டின் இரண்டாவது பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமமாக கொமர்ஷல் வங்கி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ட் ஃபினான்ஸ் (Brand Finance), 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அனைத்து துறைகளிலும் கொமர்ஷல் வங்கியை இரண்டாவது மதிப்புமிக்க வர்த்தக நாமமாகவும், நாட்டின் மதிப்புமிக்க தனியார் துறை வங்கி வர்த்தக நாமமாகவும் தரவரிசைப்படுத்தியுள்ளது.

இலங்கையின் 100 மிகவும் பெறுமதி மிக்க மற்றும் வலுவான வார்த்தக நாமங்கள் தொடர்பான பிரான்ட் ஃபினான்ஸின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மதிப்பாய்வின்படி, கொமர்ஷல் வங்கிக்கு ரூ. 46.6 பில்லியன் வர்த்தக நாம பெறுமதியானது ஒதுக்கப்பட்டுள்ளது - இது தனியார் வங்கித் துறையில் மிக உயர்ந்ததாகவும் மற்றும் நாட்டின் அனைத்து வர்த்தக நாமங்களிலும் இரண்டாவது அதிகபட்சமானதாகவும் விளங்குகிறது.

வர்த்தகநாம வலிமையைப் பொறுத்தவரை, வங்கியானது 100க்கு 86.3 வர்த்தகநாம உறுதி சுட்டெண் (BSI) மதிப்பெண்ணுடன் இலங்கையின் மூன்றாவது வலுவான வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ட் ஃபினான்ஸ், கொமர்ஷல் வங்கிக்கு மதிப்புமிக்க AAA வர்த்தகநாம உறுதி மதிப்பீட்டை வழங்கியுள்ளது, இது வங்கியின் வலுவான வர்த்தகநாம சமப்பங்கு மற்றும் அதன் எதிர்கால பெறுமதியை உருவாக்கும் திறனை பிரதிபலிக்கிறது.

பிரான்ட் ஃபினான்ஸின் 2025 தரவரிசையில் வங்கியின் அண்மைய விருதுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க, 'இந்த அங்கீகாரமானது நாம் ஏற்றுக்கொள்ளும் மூலோபாய வர்த்தகநாம கட்டுமான செயல்முறைக்கும், எமது செயல்பாடுகளின் ஒவ்வொரு பரிமாணத்திலும் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கும் ஒரு சான்றாகும். கொமர்ஷல் வங்கி, நிதி வலிமையை மட்டுமல்லாது, மீள்தன்மை, நம்பிக்கை மற்றும் புதுமையையும் குறிக்கும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. அதிகரித்த வர்த்தகநாம பெறுமதியானது, கடின உழைப்பாளிகளான ஊழியர்களால் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட சமத்துவத்தின் அளவைப் பறைசாற்றுகிறது, மேலும் இந்த தரவரிசையானது எமது முழு குழுவினதும் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனுக்கு ஒரு அங்கீகாரமாகும். அவர்களின் அர்ப்பணிப்பானது எமது வர்த்தகநாமத்தின் பெறுமதியை தினமும் அதிகரித்து வருகிறது.'

2025 தரவரிசைப்படுத்தலானது கொழும்பு மற்றும் கம்பஹாவிலிருந்து பெறப்பட்ட வாடிக்கையாளர் ஆய்வு மாதிரியை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும் ISO 10668க்கு இணக்கமான மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தியது. ISO 20671 தரநிலைகளின்படி, சந்தைப்படுத்தல் முதலீடு, பங்குதாரர் சமப்பங்கு மற்றும் வர்த்தக செயல்திறன் உள்ளிட்ட அளவீடுகளின் சமநிலையான மதிப்பெண் அட்டை மூலம் பிரான்ட் ஃபினான்ஸ் ஆனது வர்த்தகநாம உறுதியை மதிப்பிடுக.

உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .