Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 27 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் முக்கியத்துவம் தொடர்பில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சி வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட நிறைவேற்று உப தலைவர் பண்டார ஜயதிலக குறிப்பிடுகையில், “நாட்டின் வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்களின் ஆலோசகர்களாகத் திகழும் வகையிலான நடவடிக்கைகளை, வங்கி கடந்த பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறது. 750 மில்லியன் ரூபாய்க்குக் குறைந்த புரள்வைக் கொண்ட எந்தவொரு வியாபாரமும் சிறிய, நடுத்தர தொழில்முயற்சி எனும் பிரிவின் கீழ் காணப்படும். இலங்கையில் காணப்படும் 85% முதல் 90% வியாபாரங்கள் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சிகளாகக் காணப்படுகின்றன. இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கின்றன. மொத்த தொழில் வாய்ப்பில் 70% ஐ வழங்குகின்றன. பெருமளவான சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளருக்குக் காணப்படும் பிரதான பிரச்சினையாக, நிதியியல் போதாமை காணப்படுகிறது. சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் தமக்கு அவசியமான மூலதனத்தைச் சுய சேமிப்பு மூலம் பெற்றுக் கொள்கின்றனர். ஆனாலும், 75% ஆரம்பித்து ஏழு வருடங்களில் மூடப்படும் நிலையை எதிர்நோக்குகின்றன. இதற்கு காரணம் வியாபாரத்தை ஆரம்பிக்கும் முன்னர், போதியளவு சந்தை ஆய்வுகளை மேற்கொள்ளாமை, திட்டமிடலின்மை, மிக முக்கியமாக சரியான வழிகாட்டலின்மை போன்றன தாக்கம் செலுத்துகின்றன. இதை நன்கு புரிந்து கொண்டு, சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளருக்கு உதவும் வங்கியியல் பங்காளராக நாம் முன்வந்துள்ளோம். அவர்களுக்கு நிதியியல் ரீதியில், முறையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளோம், இதனூடாக சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகள் மூடப்படும் நிலையை குறைத்து, அவற்றின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்குகிறோம். முயற்சியாளர்கள் தமது வியாபாரத்தை ஆரம்பிப்பது, போட்டியாளர்கள், நிதி முகாமைத்துவம் பற்றி மட்டும் கருதாமல், அவர்கள் தமக்குரிய அறிவைத் திரட்டிக் கொள்ள வேண்டும். குறித்த ஆளுமைகளுடனான நபர்களைத் தொழிலுக்கு அமர்த்தத் தயாராக இருக்க வேண்டும். பெருமளவு பரந்த, மாறுபடக்கூடிய டிஜிட்டல் வழங்கல்களை அறிமுகம் செய்துள்ளோம். இதில் இணைய வங்கியியல், மொபைல் வங்கியியல், பண முகாமைத்துவத் தீர்வுகள், டிஜிட்டல் வங்கிச் சேவையான FriMi அறிமுகம் செய்துள்ளோம். இது புரட்சிகரமான கொடுப்பனவு கட்டமைப்பாகவும் அமைந்துள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago