Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, மஞ்சி சுப்பர் கிறீம் கிரெக்கர் ஏனைய சகல பிஸ்கட் வகைகளை விட, நாட்டின் மிகவும் விரும்பப்படும் பிஸ்கட் வகையாகத் தெரிவாகியுள்ளதாக மஞ்சி அறிவித்துள்ளது.
நாட்டின் பிஸ்கட் பாவனையில் 23% கிரெக்கர் வகைகளுக்குக் கிடைத்துள்ளது. அதில் மஞ்சி சுப்பர் கிறீம் கிரெக்கர் 70% சந்தையைப் பிடித்துள்ளது.
இந்த ஆய்வுகளுக்கு அமைய ஒவ்வொரு நிமிடமும் நாடு தழுவிய ரீதியில் சுமார் 4,000 மஞ்சி சுப்பர் கிறீம் கிரெக்கர்கள் உண்டு சுவைக்கப்படுகின்றன.
சந்தையின் முன்னோடி என்ற ரீதியில், கிரெக்கர்களின் சந்தைப் பார்வையை வித்தியாசமான ஒரு திசைக்குக் கொண்டு செல்ல, மஞ்சி மிகவும் முக்கிய பங்கை ஆற்றியது.
இதற்குப் பிரதானமாக, நிறுவனத்தின் ‘சின்னப் பசிக்கு சுப்பர்’ வேலைத் திட்டம் மூலம் சுகவீனமுற்றோருக்கு ஆரோக்கிய உணவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பிஸ்கட், அனைவரும் உண்ணக்கூடிய ஒரு சிற்றுண்டி வகையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், 7 தட்டுகளைக் கொண்ட இந்த பிஸ்கட்டுகளை உற்பத்தி செய்வதற்கு சிறந்த தொழில்நுட்பங்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேலும், காற்று வெளியேறாது அடைக்கப்பட்டுள்ள சுப்பர் கிறீம் கிரெக்கர் உண்மையிலேயே மகிழ்ச்சிகரமான ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கிறது.
மஞ்சி சுப்பர் கிறீம் கிரெக்கரின் ‘சுப்பர்’ என்ற பகுதியின் மூலம், அது ஆரோக்கியமான சீனி, வர்ணங்கள் மற்றும் செயற்கையான மூலப்பொருட்கள் அற்றவை என்பதை உறுதிப்படுத்துகிறது. விட்டமின் A, B1, B4, B5, B6, B12, D, E, K1 மற்றும் போலிக் அஸிட் உட்பட முக்கியமான விட்டமின்கள் மற்றும் கனியுப்புகள் இதில் அடங்கியுள்ளன.
மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் போதும், உற்பத்தி நடவடிக்கைகளின் போதும், மஞ்சி மிகச் சிறந்த தொழில்நுட்பங்களையும் பொறிமுறைகளையும் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் மஞ்சி சுப்பர் கிறீம் கிரெக்கர், மிகச் சிறந்த தரத்தை அடைந்து கொண்டு, சர்வதேச அளவில் 55 நாடுகளில் தடம் பதித்துள்ளது.
அமெரிக்கன் எயார்லைன்ஸ் உட்பட பல பெருமைமிக்க எயார்லைன்ஸ் நிறுவனங்களில் விமானப் பயணத்தின் போது, வழங்கப்படும் ஓர் உணவு வகையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago