2025 ஜூலை 24, வியாழக்கிழமை

நான்கு மாணவர்களுக்கு கொமர்ஷல் அருணலு கணக்கினூடாக விருதுகள்

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் மிகவும் திறமைசாலிகளான ஐந்தாம் ஆண்டைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை கொமர்ஷல் வங்கி பணப்பரிசாக வழங்கியுள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நான்கு மாணவர்களுக்கு வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்குத் திட்டம் ஊடாக இந்த வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. 2017 புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு இந்த வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பிடித்த நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த W.K. திணுக கிரிஷான்குமார் கொமர்ஷல் வங்கியிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டார். இரண்டாம் இடத்தைப் பிடித்த கணேமுல்ல வெலிபில்லேவ கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த M.A.M. இந்துமினி ஜயரத்ன ரூ.127,500 ஐப் பெற்றுக் கொண்டார். கூடிய தொகையைப் பெற காரணம் இவர் ஏற்​ெகனவே கொமர்ஷல் வங்கியின் அருணலு கணக்கை கொண்டிருந்தார், இரண்டாம் இடத்தைப் பெற்ற மற்றொருவரான கேகாலை துல்ஹிரிய கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த T.M.S. நயனஜித் தென்னக்கோன் 50ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டார். மூன்றாம் இடத்தைப் பிடித்த கடவத்தை கிரில்லாவல ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த D.A. தருல் ஷஹாஸ் தர்மரத்ன 25 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டார்.

1991இல் தொடங்கப்பட்ட அருணலு கணக்கு கொமர்ஷல் வங்கியின் பாடசாலை செல்லும் வயதில் உள்ள சிறுவர்களுக்கான பிரதான சேமிப்புக் கணக்குத் திட்டமாகும். இந்த பணப்பரிசுத் திட்டம் 1998இல் அறிமுகம் செய்யப்பட்டது.

கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க 2017 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் மூன்று இட‌ங்களைப் பிடித்த நான்கு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவதைப் படத்தில் காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .