Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 01 , மு.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொகுசு, சௌகரியம், பன்முகத்தன்மை மற்றும் கவர்ச்சி உள்ளிட்ட சகலதையும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, கட்டியெழுப்பப்பட்டு வரும் Colombo City Centre கூட்டுத் திட்டமானது, அதிசிறந்த முறையில் திட்டமிடப்பட்டு, கொழும்பு நகர மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவெடுத்து வருகிறது.
அதிநவீன மற்றும் அதிசொகுசு வசதிகளைக் கொண்டுள்ள இத்திட்டமானது, சர்வதேச விற்பனை நாமங்கள் கொண்ட கடைத்தொகுதிகளின் மூலம், இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் பன்முகத் தெரிவுகள் கொண்ட ஷொப்பிங் அனுபவங்களை வழங்குகின்றது. அவை,M.A.C Cosmetics,Body Shop, Charles and Keith, Skechers, Aldo, Armani Exchange, Nike, Spa Ceylon, Colombo Jewellery Store, Apple & Abans Store உள்ளிட்ட மேலும் பல விற்பனை நாமங்களைக் கொண்ட, விற்பனை நிலையங்கள் மற்றும் காட்சியறைகள் இங்கு திறந்துவைக்கப்படவுள்ளன.
கொழும்பில் நீங்கள் இதுவரை கண்டிராத, சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான, மிகவும் பிரமாண்டமான உணவகத்தை Colombo City Centre - Food Studio நிறுவனத்துடன் இணைந்து, மூன்றாம் தளத்தில் உருவாக்கி வருகிறது. அதேபோல், 700 இருக்கைகளுடன் குடும்பத்தில் அனைவருக்கும் ஒன்றாக அமர்ந்து, தமக்குத் தேவையான உணவுகளை உண்ணக்கூடிய வசதிகள் உள்ளதோடு, இத்தாலி, தாய், சீனா, ஜப்பான், இந்திய உணவுகள் உள்ளிட்ட உலகளாவிய 15 பாரம்பரியங்களுக்கு சொந்தமான உணவுகளை, சர்வதேச தரத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆறு திரைகளைக் கொண்ட ‘மல்டிபிளெக்ஸ்’ சினிமா அரங்குகளை, ஸ்கூப் சினிமா தனியார் நிறுவனத்தோடு இணைந்து Colombo City Centre உருவாக்கி வருகின்றது. 650 இருக்கைகளுடன் நாளாந்தம் 30 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
இந்தப் பிரம்மாண்ட திரையரங்குகள் மக்களுக்கு நிச்சயமாக, ஒரு சிறந்த சினிமா அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும். அதிநவீன 3D டிஸ்பிளே மற்றும் Dolby Atmos Surround ஒலியமைப்புடன் புத்தம் புதிய ஹொலிவூட் மற்றும் பொலிவூட் திரைப்படங்களை பிரம்மாண்ட ஆறு திரைகளின் மூலம் கண்டு இரசிக்க முடியும்.
இலங்கையில் முதல் முறையாக Scope Cinema திரைகளின் அதி நவீன 4k Projection தொழில்நுட்பத்தை அனுவிக்கும் வாய்ப்பு, இதன் மூலம் இலங்கையர்களுக்குக் கிடைக்கின்றது.
அபான்ஸ் குழுமம் மற்றும் சில்வர்நீடில் நிறுவனத்தின் கூட்டிணைவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களுடன் இணைந்து, இலங்கையினுள் சர்வதேச தரத்திலான முத்திரையை பதித்துள்ளது.
இதில், கட்டியெழுப்பப்படும் சர்வதேச தரத்திலான அதிசொகுசு குடியிருப்புகள் அனைத்தும் சுற்றுலா வணிகர்களுக்கான சகல வசதிகளையும் வழங்கும் முக்கிய தங்குமிடமாக அமையும்.
Colombo City Centre ஐ பார்வையிடுவதற்கும், தேவையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்வற்கு 1094 766-652-652 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும். அல்லது sales@colombocitycentre.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஈ-மெயில் அனுப்பவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago
37 minute ago