2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பேட்ஸ் ஸ்ராட்டஜிக் அலையன்ஸின் பொது உறவுகள் பிரிவின் தலைமை அதிகாரியாக ருவினி ஜயசிங்க நியமனம்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேட்ஸ் ஸ்ராட்டஜிக் அலையன்ஸ் பொது உறவுகள் பிரிவின் தலைமை அதிகாரியாக, துறையின் அனுபவம் வாய்ந்த ஊடக மற்றும் தொடர்பாடல்கள் விசேட நிபுணர் ருவினி ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் பிரிதொரு பொது உறவுகள் நிறுவனத்தில் நாட்டின் முன்னணி பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளுக்கான கொள்கை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நாம ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பாடல் ஆலோசனைகளை வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்துடன், பேட்ஸ் ஸ்ராட்டஜிக் அலையன்ஸ் பொது உறவுகள் நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்றுள்ளார்.

சன்டே ஒப்சேவர் ஆங்கில வார இதழில் இளம் ஊடகவியலாளராக தமது நிபுணத்துவ வாழ்க்கையை ஆரம்பித்திருந்த ருவினி, பின்னர் வர்த்தகம் மற்றும் பத்தி எழுத்தாளராக தன்னை தரமுயர்த்தியிருந்தார். விளம்பரத் துறையில் குறுகிய காலம் பணியாற்றியிருந்ததைத் தொடர்ந்து, அவர் சன்டே டைம்ஸ் ஆங்கில வார இதழின் வர்த்தக பிரிவு ஆசிரியராக பதவி வகித்திருந்தார். இந்த பதவி நிலையில் ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டாண்மைத் துறையில் பிரவேசித்த ருவினி, கார்சன் கம்பர்பெட்ச் நிறுவனத்தின் பொது உறவுகள் முகாமையாளராக பணியாற்றியிருந்தார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் 13 வருடங்களாக பணியாற்றியிருந்தார். ஆரம்பத்தில் ஊடக உறவுகள் முகாமையாளராக பணியாற்றிய இவர், பின்னர் கூட்டாண்மை தொடர்பாடல்கள் முகாமையாளராக இணைந்து கொண்டார். இந்த சவால் நிறைந்த காலப்பகுதியில், சர்வதேச பயண மற்றும் சுற்றுலா ஊடகவியலாளர்களுடன் இவர் பணியாற்றியிருந்தார். 

வியாபார முகவர் நிறுவனத்தின் பொது உறவுகள் புதிய பிரிவின் தலைமை அதிகாரியை வரவேற்று உரையாற்றிய பேட்ஸ் ஸ்ராட்டஜிக் அலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிமல் குணவர்தன 'கூட்டாண்மை தொடர்பாடல்கள், ஊடக அனுபவம் மற்றும் முகவர் துறை தலைமைத்துவ அனுபவம் ஆகிய 360 பாகை முன் அனுபவத்தைக் கொண்டுள்ளார். எமது வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் அனுகூலம் வாய்ந்ததாக அமைந்திருக்கும். இலங்கையின் முன்னணி பொது உறவுகள் நிறுவனமாக எம்மை தொடர்ந்தும் நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது' என்றார்.

முகாமைத்துவ நிலையில் பதவி வகித்துள்ள ருவினி, பரந்தளவு நிபுணத்துவ அறிவு மற்றும் ஊடக செயற்பாடுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளார்.

 'முன்னணி பொது உறவுகள் பிரிவின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றுள்ளதையிட்டு நான் மிகவும் மகிழச்சியடைகிறேன். ஊடக உறவுகளுக்கு அப்பாற்பட்டதாக இங்கு பொது உறவுகள் அமைந்துள்ளது. குறிப்பாக நற்பெயர் முகாமைத்துவம், சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள், பிரச்சனைகள் மற்றும் பிரச்சனைகள் முகாமைத்துவம் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை பெருமளவான நிறுவனங்கள் தமது கீர்த்தி நாமத்தை முன்னெடுப்பதற்கு உதவுமாறு கூறுகின்றன' என ருவினி ஜயசிங்க தெரிவித்தார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் இளமானிப்பட்டத்தை பெற்றுள்ள ருவினி, பிரித்தானியாவின் தொம்சன் மையத்தில் ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கைகளையும் பூர்த்தி செய்துள்ளார். இலங்கை மன்ற கல்வியகத்தில் விஜயம் செய்யும் விரிவுரையாளராக நிதி அறிக்கையிடல் நடவடிக்கைகளை இவர் முன்னெடுத்துள்ளார். அத்துடன், ஹொங்கொங் நகரை மையமாகக் கொண்ட ஏசியன் சோர்சஸ் மீடியா குழுமம் வெளிநாட்டு ஊடகவியலாளராக இவர் பணியாற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X