2025 ஜூலை 26, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கு e- கற்றல் வகுப்பறைகள் அன்பளிப்பு

Gavitha   / 2017 மார்ச் 28 , மு.ப. 11:31 - 3     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் MBD குழுமம், இலங்கையிலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் கற்றல் தீர்வுகள் இரண்டினை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குளியாப்பிட்டிய, நக்கவத்தை மத்திய கல்லூரி மற்றும் மாவனல்லை, ஹிங்குல்லை கனேதென்னை மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே இவ்வசதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் கல்விசார் அதிகாரம் பெற்ற தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு புதிய முன்னெடுப்பான e-Learning கற்றலில் மாணவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதத்திலான குழுமத்தின் குறிக்கோளுக்கு அமைவாக இந்த கற்றல் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.  

ரூ. 1.2 மில்லியன் பெறுமதியான முதல் இரு e-Learning வகுப்பறைகளை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் MBD குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் செல்வி. மோனிகா மல்ஹோத்ரா கந்தாரி சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தார். 

ISO 9001:2008 சான்றளிக்கப்பட்ட ஒரு கம்பனியான MBD குழுமமானது, இந்தியாவின் மிகப் பெரிய கல்வி கம்பனிகளுள் ஒன்றாக திகழ்வதுடன், இத்துறையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. e-Learning பிரிவின் கீழ், MBD நிறுவனம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கற்றல் முகாமைத்துவ முறைமையை வழங்குகின்றது. வகுப்பறையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி அலகுகள், இடைத்தொடர்பான e-Content, ஆசிரியருக்கு உதவியளிக்கும் தொகுதிகள் மற்றும் ஏனைய ஆதரவுச் சேவைகளும் இவற்றில் உள்ளடங்குகின்றன. இவற்றோடு இணைந்ததாக, ஆசிரியர்கள் கற்பித்தல் தொடர்பான புதிய செயல்முறைமைகளுடன் தம்மைப் பரிச்சயமாகிக் கொள்வதற்காகவும், அவர்கள் சொந்தமாக e-Content இனை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகுக்கும் விதத்திலமைந்தப் பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு வழங்குகின்றது.  

“இந்த முறைமையானது, மாணவர்கள் தங்களுடைய உரைசார் கற்பித்தல் அறிவு மற்றும் செய்முறை திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் தமது கற்றல் மட்டத்தை பரீட்சித்துப் பார்க்கவும், மேம்படுத்திக் கொள்ளவும் வசதியான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இதற்குப் புறம்பாக, கற்றலை ஒரு கேளிக்கையான மற்றும் எளிதான நடவடிக்கையாக மாற்றியமைக்கும் விதத்தில் பல்வேறுபட்ட நவீன கற்பித்தல் செயல்முறைமைகள் இதனோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனது நோக்கம் கற்பித்தல்சார் வளங்களை நியமத் தரமாக்குகின்ற அதேநேரத்தில் ஆசிரியர்கள் சுயமாகவே e-Content மற்றும் மதிப்பீடுகளை உருவாக்குவதற்கும் கற்றல் முறைமையை மேலும் வரவேற்கப்படும் ஒரு விடயமாக மாற்றியமைக்கவும் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாகும்” என்று MBD நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மோனிகா மல்ஹோத்ரா கந்தாரி தெரிவித்தார்.   


  Comments - 3

  • pirapa Thursday, 14 December 2017 03:48 PM

    Good rey

    Reply : 0       0

    pirapa Thursday, 14 December 2017 03:48 PM

    Good rey

    Reply : 0       0

    pirapa Thursday, 14 December 2017 03:53 PM

    இதனால் மிகவும் பிரயோசனமாக இருக்கின்றது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X