Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 13 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவரான கெனிச்சி சுகானும, புத்தளயில் அமைந்துள்ள Dole பண்ணையில் மேற்கொள்ளப்படும் வாழைத்தோட்டச் செய்கையைப் பார்வையிடுவதற்காக, நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தூதுவர் சுகானும, அவரது மனைவி, தூதரகத்தின் இரு அதிகாரிகள் மற்றும் ITOCHU Corporationஇன் கொழும்பு இணைப்பு அலுவலகத்தின் பொது முகாமையாளரான, ஹிரோகாசு நாகா ஆகியோருடன் இணைந்து இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
தூதுவர் சுகானும தனது விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “பண்ணைக்கு நேரடியாகச் சென்று, தோட்டச் செய்கையைப் பார்வையிட்டதையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்றார். “இலங்கையில் Dole இனால் மிகவும் தொழில்நேர்த்தியுடன் முன்னெடுக்கப்படுகின்ற விவசாய வர்த்தகத்தின் நடைமுறையினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், உற்பத்திகள் எவ்வாறு அறுவடை செய்யப்பட்டு, அதன் பின்னர் ஏற்றுமதிக்காகப் பொதியிடல் செய்யப்படுகின்றன என்பது தொடர்பான நடைமுறையை நேரடியாகக் கண்டறிய விரும்பினேன். அப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு பாரியளவில் கிடைக்கப்பெற்றுள்ளத் தொழில்வாய்ப்புக்கள் மற்றும் இலங்கையின் ஏற்றுமதி வருவாய்க்கு, இதன் மூலமாகக் கிடைக்கும் மகத்தானப் பங்களிப்பு ஆகியவற்றைக் காண்பது மிகவும் ஊக்கமளிக்கின்றது” என்றார்.
இவ்விஜயம் தொடர்பில் Dole Lanka நிறுவனத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான பணிப்பாளரான விந்தியா வீரசேகர கருத்துத்தெரிவிக்கையில், தூதுவரின் விஜயமானது நிறுவனத்துக்கும், அதன் பணியாளர்களுக்கும் கிடைக்கப்பெற்ற மிகுந்த கௌரவம் எனக் குறிப்பிட்டார்.
“இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவரான கெனிச்சி சுகானும அவர்களை எமது புத்தள Dole பண்ணைக்கு பெருமையுடன் வரவேற்பதுடன், அவரது விஜயம் எம் அனைவரையும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இத்தகைய முக்கிய பிரமுகர் ஒருவரின் விஜயமானது, எமது பணியாளர்கள் தமது பணியை இன்னும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு, அவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது. Dole ஆனது உலகெங்கிலும் பெயர் பெற்ற ஒரு நிறுவனம் என்பதையும் இது காண்பிக்கின்றது” என்றார்.
31 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago