Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 19 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜனனி ஞானசேகரன்
பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரங்கிளில் ஒன்றான LAUGFS ஹோல்டிங்ஸ், தனது காஸ் லுப்ரிகன்ட் வர்த்தக நாமங்களை புதிய வர்த்தக நாமசின்னம்/பொதி மற்றும் விளம்பரங்களுடன் மீளறிமுகம் செய்துள்ளது. புதிய வர்த்தகநாமம் செயலாற்ற எதிர்பார்ப்பது பிரதிபிக்கப்படும். மேலும், உள்ளநாட்டிலும், சர்வதேசம் மட்டத்திலும் தனது பிரசன்னத்தை உறுதி செய்வதற்கு LAUGFS கொண்டுள்ள நோக்கத்தையம் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
LAUGFS குழுமத்தின் காஸ் தலைவர் டப்ளியு.கே.எச். வேகாபிட்டிய கருத்து தெரிவிக்கையில்,“ எமது காஸ் மற்றும் லுப்ரிகன்ட் வர்த்தக நாமச்சின்னங்களைப் புதிதாக மாற்றியமைத்துள்ளமையானது, எபபோதும் வளர்ந்து வரும் LAUGFSஇன் ஆர்வத்தை குறிப்பதுடன், பெறுமதியை உருவாக்குவதற்கு தொடர்சியாக வழிகளைக் கண்டறிவதனூடாக, நீண்ட கால உறவுளைக் கட்டியெழும்பும் தொடர்ச்சியான எமது கருத்துதிட்டத்துக்கு அமையந்துள்ளது. அடுத்த தசாப்த காலத்துக்கான வளர்ச்சிக்கு LAUGFS முதலீடு செய்வது மட்டுமன்றி, காஸ், பெற்றோல், லுப்ரிகன்ட் ஊடாக வலுத்துறையை முழுமையாக நாட்டிலும் பிராந்தியத்திலும் புதுபிக்கத்தக்க வலுவுக்கு மாற்றியமைப்பது இலக்காக அமைந்துள்ளது” என்றார்.
புதிய LAUGFS காஸ் இலச்சினை, நிறுவனத்தின் கொள்கை ரீதியலான அடித்தளத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. திரவ பெற்றோலிய வாயு சுவாலை ஒன்றின் தோற்றமானது, இலங்கையை குறிப்பதுடன், அதன் மிருதுவான எல்லைப்குதிகள் என்பதனூடாக, தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் மற்றும் தரம் ஆகியன குறிக்கப்படுகின்றன. பின்புலத்தில் காணப்படும் மஞ்சல் வர்ணத்தினூடாக, கூட்டாண்மை உறுதிபாடு, ஆர்வம் மற்றும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடியுரிமை ஆகியன பிரதிபலிக்கப்படுவதுடன், நீலச்சுவாலையின் மூலமாக தூய சுவாலை மற்றும் வினைத்திறன் வாய்ந்த வகையிலான திரவ பெற்றோலிய வாயு எரிவு போன்ற உறுதி செய்யப்படுகின்றன.
நம்பிக்கை வென்ற வர்த்தக நாமமான LAUGFS காஸ் அதன் வர்த்தக நாம தூதுவராக பூஜா உமசாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.பங்களாதேஷூக்கு தனது செயற்பாடுகளை ஏற்கெனவே விஸ்தரித்துள்ள நிலையில், உள்நாட்டு வலு மற்றும் சமூகத்துறைக்கு மட்டும் தனது பங்களிப்பை வழங்க LAUGFS அர்ப்பணிக்காமல், பிராந்திய சந்தைகளுக்கு சென்றடைவதனுடாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு வலுசேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. உள்நாட்டு திரவ பெற்றோலிய வாயு துறைக்கு முதலீடாக, மாகம்புர மஹிந்த ராஷபக்ஷ துறைமுகத்தில் வலு ஏற்றுமதி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக திரவ பெற்றோலிய வாயு ஏற்றுமதி, இறக்குமதிக்கான நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago