2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பெரன்டினா முன்னெடுக்கும் 'கல்விக்கான நடை'

A.P.Mathan   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கல்விக்கான நடை' எனும் செயற்பாடு Give2SriLanka, (www.give2SriLanka.com) வினால் அண்மையில் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், பெரன்டினா சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள்,  ஊழியர்கள் மற்றும் பல நலன்விரும்பிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். Give2SriLanka வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடை மற்றும் இசை நிகழ்வின் மூலமாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி திரட்டல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றன முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக நாட்டின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த செயற்பாடுகளின் மூலமாக பயன்பெற்ற வண்ணமுள்ளனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நெதர்லாந்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் ஜொயேன் டூர்நேவார்ட் கலந்து கொண்டார். பெரன்டினா மற்றும் Give2SriLanka ஆகிய இலாப நோக்கற்ற அமைப்புகள் இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் நுண்நிதியியல் துறையில் கடந்த இரு தசாப்த காலமாக முன்னெடுத்து வருவதை பாராட்டியிருந்தார். இந்த நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களுக்கும் நெதர்லாந்து தொடர்ந்து பங்களிப்பு வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நடை நிகழ்வைத் தொடர்ந்து, நாட்டின் தெரிவு செய்யப்பட்ட் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கு (க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடம் உள்ளடங்கலாக 6 திறமைச் சித்திகளை எய்தியவர்கள்), மற்றும் (சமுர்த்தி அல்லது தனிநபர் வருமானம் குடும்பமொன்றில் 5000 ரூபாயை விட குறைவாக அமைந்திருக்கின்றமை) வழங்கப்பட்டிருந்தன. இதன் மூலம் 2015 மொத்தமாக வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்வடைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக, சிறுவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பு அல்லது உயர் கல்வி வழங்கப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டிருந்தது. பெரன்டினா தலைவர் துலான் டி சில்வா இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், Give2SriLanka செயற்பாட்டின் மூலமாக இலங்கையின் பின்தங்கிய பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவதின் நோக்கம் பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தார்.

இந்த நடை நிகழ்வில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில், இலங்கையின் இசைத் துறையைச் சேர்ந்த பிரபல்யமானவர்கள் பங்கேற்றிருந்தனர். பாதியா மற்றும் சந்துஷ் ஆகியோரின் பாடல்களும், புகழ்பெற்ற இசைக்குழுவான TNL Onstage 2015 இன் வெற்றியாளர்களான Daddy இசைக்குழுவும் Cosmogyral மற்றும் Infinity ஆகியனவும் பங்கேற்றிருந்தன. இந்த இசைக் கலைஞர்கள் கல்விச் செயற்பாடுகளுக்கு தமது பங்களிப்புகளை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்கள் இந்நிகழ்வுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தைச் சேர்த்திருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X