2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

படைவீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் எடிசலா

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலின் கீழ், படைவீரர்கள் சேவை அதிகார சபையானது, கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இணைந்து, படைவீரர்கள் சமூகத்துக்கு வலுவூட்டல் மற்றும் மானிய உதவித் திட்டம் ஒன்றை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது. கடந்த மாதம், மட்டக்களப்பு மாகாண செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள படைவீரர்கள் சமூகங்கள், மானிய உதவிகளைப் பெற்றுள்ளன.  

படைவீரர்களின் 425 பிள்ளைகள், 75 யுத்த அனாதைகள் மற்றும் இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு, பாடசாலை புத்தகப் பைகள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இலங்கை மக்கள், தமக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வை செழிப்பாக்கும் எடிசலாட் வர்த்தகநாமத்தின் இலட்சியத்துக்கு அப்பால், இத்திட்டத்துக்கு தனது மனமுவந்த பங்களிப்பையும் எடிசலாட் நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவும் இத்திட்டத்துக்கு தமது பங்களிப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்வேறு சமயங்களையும் சார்ந்த மதகுருமார், அரச திணைக்களங்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர், இத்திட்டத்தை ஏற்பாடு செய்து, முன்னெடுப்பதற்கு உதவியிருந்தனர்.

  இளம் சமுதாயத்தினர் தமக்கு சிறந்த எதிர்காலத்தைத் தோற்றுவிக்கும் வகையில் அவர்களை வலுவூட்டி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் மத்தியில் சமாதான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X