2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பைரஹா ஃபார்ம்ஸ் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையளிப்பு

Freelancer   / 2023 ஜூன் 02 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி தனது சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலைக்கு ரூ. 1.4 மில்லியன் தொகையை தாராள நன்கொடையாக வழங்கியுள்ளது. பைரஹா குழுமத்தின் ஸ்தாபகரான அமரர் நளீம் ஹாஜியார் அவர்களின் சொந்த ஊர் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை என்பது குறிப்பிடத்தக்கதுடன், அவரைக் கௌரவிக்கும் வகையில் இந்நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 1,413,932 தொகை நன்கொடையானது, 5 படுக்கை வசதி கொண்ட தீவிர கவனிப்பு சிகிச்சைப் பிரிவை  இவ்வைத்தியசாலையில் நிறுவி, தீவிர மருத்துவ சிகிச்சை மற்றும் கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், இலங்கையில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், உதவிக் கரம் நீட்டவும் இது இடமளிக்கிறது.

நாகொடை போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது தீவிர கவனிப்பு சிகிச்சை வசதிகள் இல்லை என்றும், களுத்துறை மாவட்டம் மற்றும் அதற்கு அப்பால் 1.4 மில்லியன் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனை வளாகத்தினுள் இத்தகைய வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவமனை அதிகாரிகள் நீண்டகாலமாக கருத்தில் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மருத்துவமனை 1,125 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளதுடன், வருடாந்தம் 108,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

நாகொடை போதனா வைத்தியசாலையில் இருந்து அதன் பணிப்பாளர் வைத்தியர் மதுபாஷினி, பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிந்தா குணரத்ன, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் கமணி மற்றும் விசேட வைத்திய ஆலோசகர் வைத்தியர் எஸ்.பி.கே வதுடுர, செவிலியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தவர்கள் நிறுவனத்தால் நிதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்புதிய பிரிவை முழுமையாக பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

தீவிர கவனிப்புச் சிகிச்சைப் பிரிவில் புதிய சிகிச்சை விடுதி இலக்கம் 16 இன் ஏற்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அண்மையில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பணிப்பாளர் சபைத் தலைவர்ஃநிறைவேற்றுப் பணிப்பாளரான யாக்கூத் நளீம் மற்றும் சக பணிப்பாளர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி குமாரினி கந்தப்பா, ஆளணி மற்றும் நிர்வாக குழும முகாமையாளர் எஸ்.பி. குமாரதாச மற்றும் வர்த்தகநாம முகாமையாளர் ரவின் மதுசங்க ஆகியோர், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிந்தா குணரத்ன மற்றும் பல வைத்தியசாலை ஊழியர்கள் முன்னிலையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .