Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 05 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு பெரும்பாலான நிறுவனங்கள் தமது ஊழியர்களை பணித்துள்ள நிலையில், இவ்வாறு வீடுகளிலிருந்து பணியாற்ற முடியாத தொழில்கள் சுமார் 50 சதவீதமானவை காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது.
மொத்த நிறுவனங்களில் சுமார் 15 சதவீதமானவை, வீட்டிலிருந்து பணியாற்றுவது என்பது தமது நிறுவனத்தின் பணிக் கலாசாரத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்பதாகவும், எனவே, தொழில்நுட்பத்தின் முறையான பயன்பாட்டுடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளன. 17 சதவீதமான நிறுவனங்கள் தமது ஊழியர்களின் வீடுகளில் அவர்களுக்கு பணிபுரிவதற்கு அவசியமான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் சவால்களை எதிர்நோக்கியிருந்தன. ஏழு சதவீதமான நிறுவனங்கள், தமது ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கான சூழலுக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்ததாகவும், 11 சதவீதமான நிறுவனங்கள், ஏனைய விதமான சவால்களை எதிர்கொண்டிருந்தாகவும் தெரிவித்திருந்தன.
இலங்கையின் விவசாய சமூகத்தில் ஏர்னஸ்ட் அன்ட் யங் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்துக் கணிப்பின் போது இந்த தரவுகள் பெறப்பட்டிருந்தன. அண்மையில் ஏர்னஸ்ட் அன்ட் யங் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கையின் சந்தைப் போக்குகள், தற்போது, அடுத்த மற்றும் எதிர்காலத்தில் மனித வளங்கள் பிரிவின் முக்கிய செயற்பாடு எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெபினார் கருத்தரங்கின் போது நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜனனி செயோன் இந்த தரவுகளை வெளிப்படுத்தியிருந்தார்.
உற்பத்தி, நிர்மாணம், சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் கொரோனாவைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 45 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. நாட்டில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 50 சதவீதமானவர்கள் இந்த துறைகளில் பணியாற்றுகின்றனர். சுற்றுலாத் துறை மற்றும் விருந்தோம்பல் போன்றன பின்னடைவிலிருந்து மீள்வதற்கு சுமார் ஒரு வருடங்கள் வரை செல்லக்கூடும். உற்பத்தி மற்றும் நிர்மாணத்துறை போன்றன மீட்சி பெறுவதற்கு ஒன்பது மாதங்கள் வரை செல்லக்கூடும் என இந்த கருத்தாய்வில் கண்டறியப்பட்டிருந்தது. இந்த துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தமது மூலதன செலவீனத்தை 100 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளதென செயோன் குறிப்பிட்டார்.
அடுத்த மூன்று மாத காலப்பகுதி, 3-6 மாத காலப்பகுதி மற்றும் 6 மாதங்களுக்கு அப்பாற்பட்ட காலம் என மூன்று கூறுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என செயோன் குறிப்பிடுகையில், வியாபார தொடர்ச்சித்தன்மை தொடர்பில் எழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பது மற்றும் ஊழியர்களை பாதுகாப்பதற்காக பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் மனித வளங்கள் பிரிவு இணைந்து பணியாற்றுவது தொடர்பில் அடுத்த மூன்று மாதங்களினுள் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. 3-6 மாத காலப்பகுதியினுள், மட்டுப்படுத்தப்பட்டளவு வியாபாரத்தை நிர்வகிப்பது, நடுத்தரளவு காலப்பகுதி வியாபார சவால்களை மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்வது போன்றன தொடர்பில் கவனம் செலுத்தலாம். ஆறு மாதங்களின் பின்னர் இடர் காலப்பகுதியின் பின்னர் புதிய வழமையான செயற்பாடுகள் மீளத் திரும்புவதை வியாபாரங்களால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும். அதற்கேற்ற வகையில் வியாபாரங்களுக்கு தமது எதிர்கால செயற்பாடுகளை கட்டமைக்க வேண்யிருக்கும். என்றார்.
இந்த கருத்தரங்கின் போது பங்கேற்றிருந்த யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா தவிசாளர் சுனில் விஜேசிங்க, நாம் மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியை கடந்த வண்ணமுள்ளோம், இவ்வாறான நிலைக்கு நாம் கடந்த காலங்களிலும் முகங்கொடுத்திருந்தோம், அச்சந்தர்ப்பங்களில் ஊழியர்களின் உதவியுடன் எம்மால் வெற்றிகரமாக முன்னோக்கிய பயணிக்க முடிந்தது. நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவனங்களின் பிரதான அதிகாரிகள், ஊழியர்களுக்கு தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன், நிறுவனத்தினால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இவ்வாறான இடர் நிலைகளின் போது ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு ஊழியர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களிடையே சிறந்த உரையாடல்கள், சிறந்த உறவுகள் மற்றும் சிறந்த கொள்கைகள் போன்றன காணப்பட வேண்டும் என இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
17 minute ago
26 minute ago