Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 25 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய மற்றும் புத்தாக்கமான Chat Extension களை அறிமுகம் செய்துள்ளதாக Viber அறிவித்துள்ளது. இதனூடாக சுமார் ஒரு பில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் புதிய வழியில் தமது உணர்வுகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Viber இன் Chat Extension கள் பாவனையாளர்களின் உரையாடல்களை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், chat இலிருந்து வெளியேறாமல், உடனடியாக GIF கள் மற்றும் YouTube வீடியோகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
Viber Shouts என்பது, Viber பாவனையாளர்களுக்குத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளதுடன், வண்ணமயமான பின்புலங்களில் chat களை மேற்கொள்ள முடியும். ஏனையவர்களிடமிருந்து வெளிப்படுத்திக் காண்பிக்கக்கூடியதாக இது அமைந்துள்ளது.
அறிமுகத்தின்போது 20க்கும் அதிகமான message bubble பின்புலங்கள் தெரிவுகளை கொண்டுள்ளதுடன், Viber எதிர்காலத்தில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேலும் பல background களை அறிமுகம் செய்யவுள்ளது.
Favorites என்பது, சகல பாவனையாளர்களுக்கும் பயனுள்ள Chat Extension ஆக அமைந்துள்ளதுடன், முக்கியமாக பாவனையாளருக்கு பிடித்த GIFs, links மற்றும் YouTube கள் போன்றவற்றை தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் பகிர்ந்து கொள்ள உதவியாக அமைந்துள்ளது.
Viberஇனுள் பாவனையாளர்கள் எந்தவொரு GIF, link அல்லது YouTube வீடியோவில் நீண்ட நேரம் அழுத்தி, அவற்றை தமக்கு பிடித்தவையாக சேகரித்து வைத்திருக்க முடியும். பின்னர், அவற்றை Chat Extension ஐ பயன்படுத்தி இலகுவாக அணுகிக் கொள்ள முடியும்.
Location என்பது இடத்தை பகிர்ந்து கொள்ளும் புதிய அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளதுடன், அருகிலுள்ள பகுதிகள் தொடர்பான பொருத்தமான தகவல்களை chat இல் பகிர்ந்து கொள்ளும் வகையில் உள்ளது.
புதிய அமைவிட செய்தியில் குறிப்பிட்ட பகுதிக்கான “Open” பொத்தான் அடங்கியுள்ளது. பாவனையாளர்களுக்கு தமது தெரிவுக்கமைய navigation app ஐ பயன்படுத்த அனுமதிக்கும்.
பிரத்தியேக தகவல்களை பொறுத்தமட்டில், இந்த அம்சம் தமது பகுதிகள் பற்றிய விவரங்களைப் பெற்றுக் கொள்ள Viberக்கு அனுமதியளித்த பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும். அத்துடன், தமது நண்பர்களுடன் Location Chat Extension என்பதைத் தெரிவு செய்தால் மட்டுமே செயற்படும்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025