2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதிய கிராமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் யோகட் வகை அறிமுகம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சதீஸ்

ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தின் கிழ் நுவரெலியா மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 320 எல் வெஞ்சர் கிராமசேவகர் பிரிவின் கீழ் நோர்வுட் வெஞ்சர் தேயிலைத் தொழிற்சாலை பிரிவில் புதிய யோகட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உருவாக்கபட்டுள்ளது.  

அதன் முதல் ஆரம்பகட்ட நிகழ்வு நோர்வுட் சின்ன எலிப்படை தோட்டத்தில் உள்ள கலாசார மண்டபத்தில் வெஞ்சர் செட் யோகட் அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்   ரோசிபிட்டா சேவியர் தலைமையில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகன புஷ்பகுமார நோர்வுட் பிரதேச சபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் திருமதி ஏ.எம்.ஜயசூரிய ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் ஏ.சரவணபவன் கிராம உத்தியோகத்தர் பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கணேசன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக தயாரிக்கபட்ட புதிய யோகட் வகையினை பிரதம அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .