2025 ஜூலை 23, புதன்கிழமை

புதிய முகவரியில் SDB வங்கியின் மட்டக்களப்பு கிளை

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

SDB வங்கியின் மட்டக்களப்பு கிளை, புதிய முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த, நட்பு ரீதியான சேவையை அதிநவீன வசதிகளுடன் வழங்கும் வகையில், இல. 24, பார் வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் திறக்கப்பட்டுள்ளது.  

SDB மட்டக்களப்பு கிளை, பிறந்த குழந்தைகளிலிருந்து சிரேஷ்ட பிரஜைகள் வரை, தமது அனைத்து வாடிக்கையாளர்களுக்குமான பரந்த சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப, ‘லக்தரு’ சிறுவர் சேமிப்பு, ‘சீதனம்’ முதலீட்டுக் கணக்கு, ‘ஜவய’, ‘உத்தமி’, ‘உபஹார’, ‘தஷக’, ‘SDB ஆயோஜன’, ‘ஸ்வர்ணகிரண’, ‘ரண்மினி’ அடகு சேவை, SDB லீசிங், SME பிளஸ், Top Saver எனும் பெயர்களின் கீழ் காணப்படுகின்றன.

எஸ். கேஷாந்த் இக்கிளைக்கு தலைமை தாங்குவதுடன், இக்கிளை கடந்த 10 வருட காலமாக, இப்பிரதேச மக்களுக்குத் தனது சேவையை வழங்கி வருகின்றது.   

மட்டக்களப்பு கிளையானது SDBஇன் தலைவர் திருமதி. சாமதானி கிரிவந்தெனிய, SDBஇன் தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமைளார் நிமல் C. ஹப்புஆராச்சி, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் குகநாதன், SDBஇன் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய முகாமையாளர் V.K.L சுகுமார் மற்றும் விசேட பிரதிநிதிகளின் முன்னிலையில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .