Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓய்வூதியம் பெறுவோரை வருமானமீட்டும் செயற்றிட்டங்கள் ஆரம்பிப்பதில் ஈடுபடுத்தவும், அவர்களை இலங்கையின் உழைக்கும் படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யும் நோக்குடன் “SDB திவி சவிய” தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி புத்தல பிரதேச செயலாளர் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது அவர்களின் அணுகுமுறையை விருத்தி செய்து வியாபாரங்களை ஆரம்பித்து முன்னடத்திச்செல்வதற்கான ஊக்குவிப்பும் நிதியுதவியும் எங்களின் மூலம் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் போது அவர்களை ஊக்குவிப்பதற்காக விஷேட அறிவுரைகள் நடாத்தும் அதேவேளை வியாபாரங்களை ஆரம்பித்து முன்னடத்திச்செல்வதற்கான தொழில்நுட்ப மற்றும் திறன் விருத்தி பற்றி, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மூலம் விளக்கங்களும் வழங்கப்பட்டது. அதேபோல் SDB வங்கியின் சேவைகளில் அவர்களுக்கு பொருத்தும் கடன் மற்றும் கடனை பெறும் முறையும் வங்கியினால் அவர்களுக்காக வழங்கப்படும் மற்ற சேவைகள் பற்றியும் வங்கியின் பிரதிநிதியால் விளக்கப்பட்டது.
இப்பயிற்சிப்பட்டறையில் புத்தல பிரதேச செயலாளர் டீ.எம்.சுமதிபால அவர்கள், புத்தல உதவி பிரதேச செயலாளர், புத்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, SDB வங்கியின் ஊவா பிராந்திய முகாமையாளர் கே.பீ. ரத்னாயக மற்றும் SDB வங்கியின் புத்தல, மொனராகலை மற்றும் சியம்பலாண்டுவ கிளை முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.
23 Jul 2025
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jul 2025
23 Jul 2025