Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.எல்.ரி.யுதாஜித்
பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி தொடர்பான பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார, மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை உத்தயோகத்தர்களுக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.
சிவில் சமூக அமைப்புகளின் உள்வாங்கல் மற்றும் ஆளுகைத் திறன்களைக் கட்டியெழுப்புவதன் ஊடாக, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துதல் என்ற வேலைத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் கன்டிகப் இன்ரர் நசனலின் புலம்பெயர் நிறுவனத்தால் (கன்டிகப் இன்குலூசன்) கிழக்கு மாகாணத்தில் அமுலாக்கப்படுகிறது.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி தொடர்பான பயிற்சிப்பட்டறையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சிவில் சமூக அமைப்புகளின் உள்வாங்கல் மற்றும் ஆளுகைத் திறன்களைக் கட்டியெழுப்புவதன் ஊடாக, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துதல் என்ற வேலைத்திட்டம் 2016ஆம் ஆணடு ஜனவரி தொடக்கம் 2018 டிசம்பர் வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில், கன்டிகப் இன்குலூசன், கமிட் நிறுவனங்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அமுலாக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பெறுமதிச்சங்கிலி அபிவிருத்திக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை கல்லடியிலுள்ள கிறீன் கார்டன் விடுதியில் நடைபெற்றது. கன்டிகப் இன்குலூசன் நிறுவனத்தின் தனியார் பிரிவு பங்காள் முகாமையாளர் ரி.விக்னேசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .