Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 19 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலைத்துறைக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, சர்வதேச ரீதியில் பார்வையிடும் வழிமுறையை மாற்றியமைக்கும் முகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்களுடன் போட்டியிட்டு ‘நிலைபேறாண்மை உணவு விருதுகள் 2018’ நிகழ்வில் பொகவந்தலாவ தேயிலை நிறுவனம் ‘புதிய நிலைபேறான தயாரிப்பு’ எனும் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஜூன் மாதம் அம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற நிலைபேறான உணவு விருதுகள் 2018, இந்த உயர் கௌரவிப்பை பொகவந்தலாவ ரீ எஸ்டேட்ஸ் எய்தியிருந்தது.
சர்வதேச நிறுவனங்களான சொகோலெரோ எனர்ஜி ட்ரிங் (பெல்ஜியம்), கூப் சுவிட்ஸர்லன்ட் இன்செக்ட் பேஸ்ட் ஃபுட் புரொடக்ட்ஸ் அன்ட் சீமோர், சீ பேகன் மீட் சப்ஸ்ரிடியுட் (நெதர்லாந்து) போன்றன ‘புதிய நிலைபேறான தயாரிப்பு’ எனும் பிரிவில் இறுதி நிலைக்காகப் போட்டியிட்டிருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த நிலைபேறாண்மை உள்ளம்சங்களுக்காக கௌரவிப்பைப் பெற்ற உணவு பான வகையைத் தெரிவு செய்யும் வகையில் இந்தப் பிரிவு அமைந்திருந்தது.
சர்வதேச உணவுத் துறையின் நிலைபேறாண்மையைக் கவனத்தில் கொண்டும், நிலைபேறாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் நேர்த்தியான பங்களிப்பை வழங்குவோரை கௌரவிக்கும் வகையிலும் நிலைபேறான உணவு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் தலைவர் அமர்ஜித் சஹோடா கருத்துத் தெரிவிக்கையில், ‘உணவு என்பது தற்போது உலகில் காணப்படும் சூழல் மற்றும் சமூகசார் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது.
நிலைபேறாண்மை உணவு விருதுகளை அறிமுகம் செய்வதனூடாக, நிலைபேறான உணவுத் துறையை கட்டியெழுப்ப உதவும் நபர்கள் மற்றும் சூழலுக்குப் பாதுகாப்பான நிலையைத் தொடர ஊக்குவிப்போரை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளோரையும் கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
கடந்த ஆண்டு அம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற நிலைபேறான உணவு மாநாட்டில் சிறந்த உதாரணமாக பொகவந்தலாவ கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஃபிரெஷ் புரொடியுஸ் சஞ்சிகையின் பதில் ஆசிரியர் மற்றும் பிரித்தானியாவின் கார்டியன் சஞ்சிகையின் சுயாதீன ஊடகவியலாளரான நினா புல்மன், பொகவந்தலாவ தேயிலை தோட்டத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டு, தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பிரித்தானியாவின் ஹஃபிங்டன் போஸ்ட் சஞ்சிகையில் அறிக்கையாக வெளியிட்டிருந்தனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago