2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

முகாமைத்துவ பணிப்பாளராக நந்த பெர்ணாண்டோ தெரிவு

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பத் வங்கி, தனது புதிய முகாமைத்துவ பணிப்பாளராக நந்த பெர்ணாண்டோவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நியமனம் இன்று செவ்வாய்க்கிழமை (13) முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பத் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது முதல், நிறுவனத்தின் வௌ;வேறு செயற்பாடுகளில் முக்கிய பங்கை வகித்து வந்த பெர்ணாண்டோ, இந்த நியமனத்துக்கு முன்னதாக பிரதம செயற்பாட்டு அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

சம்பத் வங்கியின் பெறுமதிகள், பங்காளர் பிரசன்னம் மற்றும் வியாபார இலக்குகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பெர்ணாண்டோ திட்டமிட்டுள்ளதுடன், நாட்டில் மேலும் வங்கியின் விஸ்தரிப்பு மற்றும் வளர்ச்சியைப் பதிவு செய்யவும் எதிர்பார்த்துள்ளார்.

தனது தொழில் வாழ்வில், பெர்னான்டோ, வங்கியின் வௌ;வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான செயற்பாடுகளிலும் இவர் பங்களிப்பு வழங்கியிருந்தார். சில்லறை மற்றும் கூட்டாண்மை வங்கியியல் மற்றும் ஏனைய பல முக்கிய பகுதிகளில் இவர் பங்களிப்பு வழங்கியிருந்தார்.

இலங்கை வங்கியியலாளர் கல்வியகத்தின் இணை அங்கத்தவர் என்பதுடன், இவர் வணிக முகாமைத்துவத்தின் மாஸ்டர்ஸ் பட்டத்தையும் கொண்டுள்ளார். இவர் தகைமை வாய்ந்த குழரச டீநயன டுநயனநச வுசயiநெச என்பதுடன் இலங்கை சாரணர் சம்மேளனத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்கிசை, பரி.தோமாவின் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், பாடசாலையின் குழுக்கழகத்தின் ஆலோசகராகவும் இயங்கி வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X