2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முதல் நிலை வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

Gavitha   / 2017 பெப்ரவரி 28 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி 2016ஆம் ஆண்டில், வரிக்கு முந்திய ​இலாபமாக 20.051 ரூபாயைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்டுள்ள இலங்கையின் முதலாவது தனியார் வங்கி என்ற நிலையையும் எய்தியுள்ளது என வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பெறுமதி சேர் வரிக்கு (VAT) முந்திய இலாபம் 18.58 வீதத்தால் அதிகரித்து 23.755 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. மீளாய்வுக்கு உட்பட்ட 12 மாத காலப்பகுதியில், நான்கு மாத காலத்துக்கான வரி, 11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம், வங்கியின் VAT செலவு 28.17 வீதத்தால் அதிகரித்து 3.703 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. 2015இல் செலுத்திய தொகை 2.889 பில்லியனில் இருந்து இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  

வரிக்கு முந்திய இலாபத்தில் ஈட்டப்பட்ட 16.96வீத வளர்ச்சி வரிக்கு பிந்திய இலாபத்தின் வளர்ச்சியால், சிறப்பாக ஈடு செய்யப்பட்டது. இது 2016 டிசெம்பர் 31ல் 21.92 வீதத்தால் அதிகரித்து 14.513 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. நாட்டின் தனித்துவமான தனியார் வங்கி கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.  

இந்த குறிப்பிட்ட ஆண்டில், வங்கி 9.385 பில்லியன் ரூபாவை வரியாகச் செலுத்தியுள்ளது. 2015இல் சுப்பர்கெயின் வரியாக செலுத்தப்பட்ட 2.570 பில்லியனிலும் பார்க்க இது 15.78 வீதம் அதிகமாகும்.  

இந்தப் பெறுபேறுகள் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கித் தலைவர் தர்ம தீரசிங்க,“2016இல் எட்டப்பட்டுள்ள சாதனைகள் பற்றி வங்கி பெருமை அடைய முடியும். துரிதமாக மாறிவரும் சூழலிலும் கூட வங்கி தனது வளர்ச்சியைப் பேணக் கூடிய ஆற்றல் கொண்டது என்பதை இது பிரதிபலிக்கின்றது. ஐந்து ஆண்டுகளில், எமது ஐந்தொகையின் முக்கிய அலகுகள் இரட்டிப்பாகியுள்ளன. 2016 இந்த சாதனைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X