Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ச.சேகர்
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் மொத்த மின்சார தேவையைப் பூரணப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், திங்கட்கிழமை முதல் மின்சார வெட்டு நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை முதலாவது அறிவித்தல் வெளியாகியது. அதாவது காலையில் ஒரு மணி நேரமும் மாலை வேளையில் ஒரு மணி நேரமுமாக ஒரு நாளைக்கு 2 மணித்தியாலங்கள் மின்சார வெட்டு அமுல் செய்யப்படும் என அந்த அறிவித்தல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களினுள் அதே அறிவித்தல் மேலும் மெருகேற்றம் செய்யப்பட்டு, காலையில் 2½ மணி நேரமும் மாலையில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதியம் இந்த அறிவித்தலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, காலை வேளையில் 1 மணி நேரமும் மாலையில் ½ மணி நேரமும் இந்த மின்வெட்டு வெள்ளிக்கிழமை வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12 மணி நேரத்தினுள் இவ்வாறான மூன்று வெவ்வேறு கால வரையறைகள் அறிவிக்கப்பட்டுள்ளமையானது, குறித்த தீர்மானமெடுக்கும் குழுக்கள் மத்தியில் ஒரு வித உறுதியற்ற தன்மை காணப்படுவதை எடுத்துக்காட்டுவதுடன், முறையான திட்டமிடலை மேற்கொள்ளக்கூடிய தன்மையற்ற நிலையையும் காண்பிக்கிறது. அத்துடன், நாட்டின் மின்சாரத்தேவை என்ன என்பது பற்றிய கணிப்பீடும், தம்மால் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவு பற்றிய கணிப்பீடும் மேற்கொள்ளப்பட்டு, அதன் வித்தியாசத்தைக்கொண்டு இந் நேரத்தை முறையாகத் திட்டமிட்டிருக்கலாம்.
நாட்டின் இயக்கத்துக்கு மின்சாரம் மிகவும் இன்றியமையாத தேவை. மின்சார இடைநிறுத்தம் குறித்த அறிவிப்புகள் வெளியானவுடன் அவற்றுக்குத் தம்மை தயார்படுத்திக் கொள்ளவும், மாற்று வழிகளை நாடவும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்நிலையில் இவ்வாறு பொறுப்பற்ற, முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத அறிக்கைகள் மாறி மாறி வெளியாவதன் மூலமாக சகல துறைகளும் பெருமளவு அழுத்தங்களுக்கு உள்ளானதை அறிந்து கொள்ள முடிந்தது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் செயலிழப்பது இது முதல் தடவையல்ல. அண்மைக் காலங்களில் இந் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டவுடன், அதற்கு காரணமாக அதன் தரம் பற்றிய முறைப்பாடுகளும், முறைகேடுகள், மோசடிகள் இடம்பெற்றதாகவும் கருத்துக்கள் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகளால் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனாலும், குறித்த நிலையத்தின் செயற்பாடுகள் ஒரு சில நாட்களில் சீர் செய்யப்பட்டதும், எவரும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை. குறித்த நிலையத்தின் தரம் போதியதாக இல்லையெனில், அதில் ஏன் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும்? நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக சிறிய, நடுத்தரவு வியாபாரங்கள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தமது சொந்த மின்னுற்பத்தி வழிமுறைகளை கொண்டிருக்கக்கூடிய வசதிகள் இல்லை. புதுப்பிக்கக்கூடிய மின் உற்பத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதுக்கான முதலீடுகளும் பாரியளவிலானவையாக அமைந்துள்ளன.
இந்நிலையில், நாட்டில் ஏற்படக்கூடிய பாரிய மின் நெருக்கடிக்கு தீர்வாக மாற்று மின் உற்பத்தி மூலங்களையும், முறைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக குறித்த ஒரு மின்சார நிலையத்தில் மாத்திரம் அதைக்குறை கூறிக்கொண்டிருப்பதன் மூலமாக பொது மக்களுக்கு தீர்வுகள் பெற்றுக்கொ டுத்துவிட முடியாது.
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago