Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 31 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிஹின் லங்கா பணியாளர்கள் அண்மையில் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர்களுக்கான இருதய சத்திரசிகிச்சைகூட செயற்றிட்டத்துக்கு குறிப்பிடத்தக்களவு நன்கொடையை கையளித்துள்ளனர். நிறுவனத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வுத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த நன்கொடை மிஹின் லங்கா பணியாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டமானது, இருதய குறைபாடுகளுடன் போராடும் சிறுவர்களின் உயிரைக் காத்து, அவர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையை அளிப்பதற்கேற்ற வகையில், கடும் இருதய நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கான, சத்திரசிகிச்சை கூடத்தை அமைப்பதற்கு தேவையான நிதியை திரட்ட உத்தேசித்துள்ளது.
தற்போதைய கொள்திறன்படி, இந்த வைத்தியசாலையானது சிறுவர்களுக்கான இலவச இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்கின்றது. மிஹின் லங்கா மற்றும் ஏனைய பரோபகாரிகளினால் அளிக்கப்படும் நன்கொடைகள், தற்போது செய்யப்படும் இலவச சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 1500 என்ற ரீதியில் அதிகரிக்க உதவும். 'முன்னதாக மேற்கொள்ளப்படும் இருதய சத்திரசிகிச்சைகள்' Heart 'Operations Performed Early' என்ற H O P E முனைப்பிற்கு ஆதரவு நல்கும் வகையில், உள்ளட பிரிவுகளுக்கிடையில் அதிஷ்ட இலாபச்சீட்டு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில், மிஹின் லங்கா ஊழியர்கள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, ஸாராஸ் கார்டன் ஜூம்மா பள்ளிவாசலில் தஞ்சமடைந்திருந்திருந்த 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு தேவையான காலையுணவை அளிக்கும் வகையில் ஒன்றிணைந்தனர். அத்துடன், இதே குழுவினர், வெல்லம்பிட்டிய பகுதியில் வசிக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அத்தியாவசிய உணவுகளையும் நன்கொடையாய் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மிஹின் லங்கா தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் சமூகங்கள் மற்றும் காரணிகளைக் கண்டறிந்து, சமூகங்களைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago