Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 20 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டின் ‘SLIM நீல்சன் மக்கள் விருது’ வழங்கும் விழாவில், மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக செலிங்கோ லைஃவ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுள் காப்புறுதி சந்தையில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோ லைஃப் நிறுவனம், இந்த விருதின் தொடக்கம் முதல், கடந்த 12 வருடங்களாக வருடந்தோறும் இந்த விருதை வெல்லும் ஒரே நிறுவனமாகக் காணப்படுகின்றது.
இம்முறை, இரண்டாவது தடவையாக ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத பிரிவுகளுக்குத் தனித்தனியாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டின் காப்புறுதிச் சட்டத்தின் பிரகாரம், நிறுவனங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. அதற்கு முந்திய பத்து ஆண்டுகளிலும் கூட, செலிங்கோ காப்புறுதி பிஎல்சி நிறுவனமே ஒவ்வொரு வருடமும் இந்த விருதை வென்று வந்துள்ளது.
SLIM நீல்சன் மக்கள் விருது வழங்கும் விழா, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் மிக முக்கியமான வருடாந்த நிகழ்வாகும். நாட்டின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பல்வேறு வர்த்தக முத்திரைகள் வருடாந்தம் இந்நிகழ்வில் கௌரவகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் மூவாயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
“வாழ்க்கைக்கான நிரந்தர உறவு என்ற எமது தொனிப் பொருள் நாம் செய்யும் எல்லாவற்றிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. மக்களுக்கான எமது அர்ப்பணிப்புக்கான அங்கிகாரமாக வருடாந்தம் இந்த விருது எமக்கு கிடைக்கின்றமை மிகவும் பொருத்தமானதாகும்” என்று செலிங்கோ லைஃவ் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் கூறினார்.
“எமது ஆயுள் பாதுகாப்பை நாம் சுமார் பத்துலட்சம் மக்களுக்கு விரிவுபடுத்தி உள்ளோம். இது எமது சனத்தொகையில் ஐந்து வீதம். ஆனால் எமது சமூக நல திட்டங்கள் இதை விட பல மடங்கு அப்பால் கடந்து செல்கின்றது. அது கிட்டத்தட்ட எமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் சென்றடைகின்றது. இலங்கை மக்களின் உண்மையான வர்த்தக முத்திரையாக அது செலிங்கோ லைஃவ் ஐ திகழச் செய்கின்றது” என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago