Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 24 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
Aitken Spence Hotels இன் விளம்பர நாமமான Heritance Hotels and Resorts மற்றும் Aitken Spence Travels ஆகியவை, CCC அறக்கட்டளையால் மனநலம் குறித்த தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மற்றும் உயிர்காக்கும் 1333 மனநல உதவி எண்ணை அணுக ஊக்குவிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவிருக்கும் Bikeathon-க்கான தங்கள் கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றன.
1333 Bikeathon, இலங்கை முழுவதும் தெற்கு கடற்கரையிலிருந்து மையப்பகுதி வரை ஒரு சக்திவாய்ந்த பயணத்தை நடாத்த இருக்கிறது. இந்த பயணத்தில் , பங்கேற்பாளர்கள் Heritance Hotels & Resorts மற்றும் Heritance Ahungalla, Heritance Kandalama, Sentido Heritance Negombo மற்றும் Amethyst Resort Passikudah உள்ளிட்ட Aitken Spence Hotels-களினை தமது பிரத்யேக தங்குமிடங்களாக கொள்ள இருக்கிறார்கள்.
இலங்கையின் பல்வேறு சமூகங்களை பாதிக்கும் ஒரு முக்கிய விடயத்தை ஆதரிக்கும் வகையில், இந்த கூட்டாண்மை, சமூக பொறுப்புணர்விற்கான தொடர்பான அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டுகிறது. மனநலத்துடன் தொடர்புடைய உரையாடல்கள் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெறும் இந்த காலக்கட்டத்தில், குறிப்பாக இளைய சமுதாயத்தினுள் தேவையுடையோருக்கு உதவியாக விளங்கும் 1333 உதவி எண் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிக்க, CCC அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவதில் Heritance Hotels & Resorts மற்றும் Aitken Spence Travels பெருமை கொள்கின்றன.
"மனநலம் என்பது எல்லைகளை கடந்த ஒரு மனித அடிப்படையிலான விடயமாகும்; இது ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கிறது. இது தொடர்பில் கருணையுடன் வழிநடாத்தி, மக்களிடையே விழிப்புணர்வை தூண்டுவதன் மூலம் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஆதரிப்பதனை எங்களுடைய கடமையாக உணருகிறோம்,” என Aitken Spence PLC நிறுவனத்தின் தலைவி, ஸ்டாஷனி ஜெயவர்தன தெரிவித்தார்.
இந்த உறுதிப்பாட்டை விரிவுபடுத்துவதில், Heritance Hotels & Resorts மற்றும் Aitken Spence Travels ஆகியவை பயணத்தால் மனதை மீட்டெடுப்பதிலும், உற்சாகத்தை மேம்படுத்துவதிலும் வகிக்கக்கூடிய ஆழமான பங்கை அங்கீகரிக்கின்றன. 1333 Bikeathon போன்ற நோக்கமுள்ள பயணங்கள் உடல் இயக்கத்தை விடவும் மேலாக, அவை பிரதிபலிப்பு, குணப்படுத்துதல் மற்றும் இணைப்புக்கான இடத்தையும் உருவாக்குகின்றன.
இலங்கையின் கடற்கரையோரங்கள், பசுமையான உட்புறங்கள் மற்றும் கிராமப்புற மையப்பகுதிகள் வழியாக இந்த பாதை விரிவடையும் போது, Heritance Hotels & Resorts மற்றும் Aitken Spence Travels ஆகியவை தீவின் இயற்கை அழகை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை ஒரு பகிரப்பட்ட தேசிய முன்னுரிமையாக வலுப்படுத்தும் காட்சியாக, ஒரு கதைத்-தொடரின் மூலம் இவ் அனுபவத்தை ஆவணப்படுத்தவும் உள்ளது.
இவ்விழிப்புணர்வு இயக்கத்தை மேம்படுத்துவதில் இருந்து ஓய்வு மற்றும் புத்துணர்ச்சியின் அர்த்தமுள்ள தருணங்களை வழங்குவது வரை, Aitken Spence Hotels இலங்கையுடன் ஒன்று சேர்ந்து நடாத்துவதில் பெருமை கொள்கிறது.
Heritance Hotels & Resorts பற்றிய தகவல்கள்
Heritance Hotels and Resorts என்பது இலங்கையின் முன்னணி ப்ளூ-சிப் கூட்டு நிறுவனமான Aitken Spence Hotelsயின் ஒரு பகுதியான Aitken Spence PLC யின் விளம்பர நாமமாகும் . Aitken Spence Hotelகள் இலங்கை, மாலத்தீவுகள், ஓமான் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 18 ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளின் பல்வேறு தொகுப்பை, Heritance Hotels and Resorts, Adaaran Hotels & Resorts மற்றும் Turyaa ஆகிய குறியீடுகள் மூலம் மேற்பார்வையிடுகிறது. இலங்கையில் புகழ்பெற்ற பாவாவின்-வடிவமைப்பைக் கொண்ட ஹோட்டல்களை கொண்டிருக்கும் இந்த தர அடையாளம், அதன் சிறப்புமிக்க கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்துடன் தனித்துவமான அனுபவங்களையும் வழங்குகிறது.
About Aitken Spence Travels பற்றிய தகவல்கள்
Aitken Spence Travels சுற்றுலாத் துறையில் ஒரு முன்னணி பெயராகவும் இலங்கையில் ஒரு முதன்மையான சுற்றுலா தல மேலாண்மை நிறுவனமாக திகழ்கிறது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், உலகெங்கிலும் உள்ள எங்கள் பயணிகளுக்கு இணையற்ற சேவை மற்றும் மறக்க முடியாத விடுமுறை அனுபவங்களை வழங்குவதன் மூலம் சிறந்து விளங்குவதற்கான நற்பெயரையும் பெற்றுள்ளோம்.
Aitken Spence PLC மற்றும் TUI குழுமத்திற்கு இடையிலான கூட்டு முயற்சியாக, புதுமை, நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது. பல்வேறு வகையான சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் பன்முக கலாச்சார நிபுணர்களின் குழுவுடன், இலங்கையின் அழகு மற்றும் கலாச்சார செழுமையை உலக சமூகத்திற்கு வெளிப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்தும் வழிநடாத்தி வருகிறோம்.
34 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago