Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
Mobitel, Thuruவின் கூட்டிணைந்த திட்டமான தொழில்நுட்பத்தின் மூலம் மீள்காடாக்கம் எனும் திட்டமானது GSMA Global Mobile Awards 2020இல் காலநிலை நடவடிக்கைகளுக்கான மிகச்சிறந்த மொபைல் புத்தாக்கம் என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. GLOMO Awards என்ற பெயரில் புகழ்பெற்ற விருதுகள் வழங்கும் இந்நிகழ்வு 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பார்சிலோனாவில் இடம்பெறவிருப்பதுடன், இந்நிகழ்வில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அங்கிகாரமானது, Mobitelக்கு மேலும் பெருமையைச் சேர்ப்பதாக உள்ளது. நீண்ட காலத்துக்கு பசுமையை நிலைத்திருக்கச் செய்திடும் முன்னெடுப்புக்களை அதன் முக்கிய பலமான தொழில்நுட்பத்தின் அனுசரணையுடன் ஆரம்பித்துள்ளது. Mobitel, Thuru வின் புதுமையான டிஜிட்டல் காடாக்க முன்னெடுப்பின் துவக்கத்துக்கு அதன் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு கூட்டாளராக இருப்பதன் மூலமும் கூட்டு புத்தாக்கங்களில் ஈடுபடுவதன் மூலமும் பல்வேறு வகையான சேவைகள், அம்சங்களை நவீன தொழில்நுட்ப போக்குகளுடன் அறிமுகப்படுத்தி இந்த முன்னெடுப்பின் மூலம் அனைத்தையும் மாற்றியமைக்கத்தக்கதாக ஆக்கவுள்ளது.
Mobitel, Thuru GSMA GLOMO விருதுகளுக்கு ‘Tech4Good - Best Mobile Innovation for Climate Action’ என்ற பிரிவினில் விண்ணப்பித்ததுடன் அப்பிரிவினில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. GLOMO விருதுகள் இந்தப் புத்தாக்கத்தினரை அங்கிகரித்தும் கொண்டாடுகிறது. இதற்குக் காரணம் இவர்கள் எமது ஒவ்வொரு நாள் வாழ்வையும் கல்வியையும் மேம்படுத்திடும், சிறந்த அரசியல் பங்கெடுப்புக்கள், உயர் பொருளாதார வளர்ச்சியை தூண்டிடும் தொடர்புகளைக் கொண்டுள்ள இந்த உலகைத் தொடர்ந்தும் கட்டியெழுப்புபவர்களாகத் திகழ்ந்திடுதல் ஆகும். இவ்விருதுகள் மொபைல் தகவல் தொடர்புகளின் முக்கிய மைல்கற்களையும் ஆழமான தாக்கத்தினையும் கொண்டாடுகின்றது. மேலும் இது ‘மொபைல் தொழிற்றுறையின் ஒஸ்கார் விருதுகள்’ என்றும் அடையாளம் காட்டப்படலாம். அத்துடன் தொழிற்துறையின் புதுமை உணர்வினை உயிரோட்டத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025