Editorial / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனசக்தி பொதுக்காப்புறுதி நிறுவனத்தின் 16.4 பில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகள் கடந்த வாரம் விற்பனையாகியிருந்த நிலையில், ஏனைய பொதுக்காப்புறுதி நிறுவனங்களான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் மற்றும் செலிங்கோ இன்ஷுரன்ஸ் போன்ற நிறுவனங்களின் பொதுக் காப்புறுதி நிறுவனங்களைச் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கவர்ச்சிகரமான விலைகோரல் கிடைக்குமிடத்து அவற்றையும் விற்பனை செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனசக்தி பொதுக்காப்புறுதி நிறுவனத்தின் பங்குகளைச் சர்வதேச காப்புறுதி நிறுவனமான ‘அலையன்ஸ்’ கொள்வனவு செய்திருந்தது. கடந்த 18 மாத காலமாக இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன் மூலம், 2014ஆம் ஆண்டு முதல், இதுவரையில் நான்கு பொதுக்காப்புறுதி நிறுவனங்கள் தமது வியாபாரங்களை விற்பனை செய்துள்ளன.
“2016ஆம் ஆண்டு முதல், பொது மற்றும் ஆயுள் காப்புறுதி நிறுவனங்களின் செயற்பாடுகள் பிரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுக் காப்புறுதி நிறுவனங்கள் தமது வியாபாரங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்கின்றமையை தற்போது அவதானிக்கக் கூடியதாகவுள்ளது” என துறையின் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் பொதுக் காப்புறுதி நிறுவனங்களின் மீது ஆர்வம் செலுத்துகின்றன. இதனூடாகத் தமது வியாபாரத்தை விஸ்தரித்துக்கொள்வது அவற்றின் இலக்காக அமைந்துள்ளன. இந்நிலையில், இலங்கையில் 28 காப்புறுதி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 12 நிறுவனங்கள் ஆயுள் காப்புறுதித்துறையில் ஈடுபட்டுள்ளன. 13 பொதுக் காப்புறுதி நிறுவனங்களும் 3 ஆயுள் மற்றும் பொது காப்புறுதி நிறுவனங்களும் காணப்படுகின்றன.
“ஆயுள் காப்புறுதிச் சந்தையில் போட்டி குறைந்த மட்டத்தில் காணப்படுவதனால் நாம், எமது முழுக்கவனத்தையும் ஆயுள் காப்புறுதிப் பிரிவில் செலுத்தும் நோக்கத்துடன் பொதுக் காப்புறுதிப் பிரிவிலிருந்து வெளியேறினோம்” என ஜனசக்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரமேஷ் ஷாப்ட்டர் தெரிவித்தார்.
8 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago