Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகவும் உயிரோட்டமுள்ளதுமான ‘வர்ண அட்டையை’ (colour card) அறிமுகம் செய்வதன் மூலம் மல்டிலக் (Multilac) நிறுவனம், உங்களுக்கு பிடித்தமான சுற்றுச்சூழலை உருவாக்க, அதற்கான சாயலை வடிவமைக்க, உங்களது மனோநிலையை விபரிக்க மற்றும் உங்களது ஆளுமையை வெளிக்காட்டுவதற்கு உதவிகளை முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும், உங்களது வாழ்க்கை முறைக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வர்ணங்கள் என்பவை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டவை என்று மல்டிலக் நம்புகின்றது. இதனது புதிய ‘வர்ண அட்டை’ சிறப்பு வாய்ந்த 282 வர்ணங்களை உள்ளடக்கி இருக்கின்ற அதேவேளை, இயற்கையின் அதிசயம், வசந்தத்தின் மென்மையான நிறங்கள், நீலக் கடல்கள் மற்றும் வான்வெளி நீலத்தின் காட்சிப்பரப்புக்களை உள்ளிணைக்கின்றன. இந்த அனைத்து பிரகாசமான மற்றும் உயிரோட்டமுள்ள வர்ணங்களும் உத்வேகமளிப்பதாக செயலாற்றும்.
‘இன்று வாழ்க்கையானது அச்சுறுத்தலான விதத்தில் மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. சில வேளைகளில் மனிதர்களின் தலையீட்டின் காரணமாக இது சாந்தமடைகின்றது. சில வேளைகளில் நாம் செயற்பாட்டை நிறுத்த வேண்டிய அதிகமான விடயங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்பினால் சூழப்பட்டுள்ள வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை உள்ளடக்கிய எமது நேசத்துக்குரிய இடத்துக்கு எமக்கு முடியுமான வரை மிக வேகமாகவே நாம் திரும்பிச் செல்கின்றோம்.
இந்த அனைத்து விதமான செயன்முறைகளிலும் வர்ணம் என்பது மிக முக்கிய காரணியாக இருக்கின்றது’ என்று மல்டிலக் நிறுவனத்தின் பிரதித் தலைவரான திருமதி. நில்ருக்சி டீ சில்வா தெரிவித்தார். ‘எமது வதிவிடங்கள் அல்லது அலுவலகங்களில் இருக்கின்ற ஒவ்வொரு அறையும், குறைவான அளவு தேவைப்படும், அதிகமான இனிமை அல்லது மெருகூட்டலை வழங்குகின்ற வர்ணங்களினுள் ஒன்றித்துப்போக வேண்டும். புதிய மல்டிலக் வர்ண அட்டையின் மூலம் அதனையே நாம் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்’ என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு தனிமனித ஆளுமை, அறை மற்றும் வாழ்க்கைப் போக்கிற்கும் பொருந்தக் கூடிய விதத்திலமைந்த ‘நிறக்கற்றையிலான வர்ணங்களை’ புதிய மல்டிலக் வர்ண அட்டை கொண்டிருக்கின்றது.
இன்று வரைக்கும் கம்பனியானது நாட்டில் மிகப் பெரியதும் சிறப்பானதுமான வர்ண அட்டையை விருத்தி செய்து காண்பித்துள்ளது. எமல்சன், வெதர்கார்ட் மற்றும் எனாமல் வகையான வர்ணப்பூச்சுக்களை உள்ளடக்கியதாக இது காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .