Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மார்ச் 24 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதலாவது கொழம்ப கமத திருவிழா (KKF) கொழும்பு BMICH இல் மார்ச் 27 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வதேச திரையரங்கு தினத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த திருவிழாவில், தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில திரையரங்க திறமைகள் வெளிப்படுத்தப்படவுள்ளதுடன், பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி, கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கலாசார மையத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
பாரம்பரிய திருவிழாக்களில் இடம்பெறும் ஒன்று அல்லது இரண்டு கலையம்சங்கள் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்னெடுக்கப்படுவதைப் போலன்றி, KKF இல் பல பகுதிகளில், ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளில், பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், ஒரு நாளில் ஏழு தயாரிப்புகள் வீதம், ஏழு பகுதிகளில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை தொடர்பில் KKF இன் பணிப்பாளர் சஞ்சலா குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “நான்கு நாட்களில் நாம் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் பல காட்சிகளை கொண்டிருப்போம். வழமையாக இது போன்ற திருவிழாக்களில் ஒரு காட்சி மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படும். ஆனாலும், இந்த திருவிழா முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கும். இந்த நிகழ்வுக்காக புதிதாக அமைக்கப்பட்ட 230 ஆசனங்களைக் கொண்ட திரையரங்கும் திறக்கப்படும். கொழம்ப கமத மையத்தினால் இந்த திருவிழா பணிகளுக்கு ஆரம்ப வித்திடப்பட்டிருந்தது. 2022 நவம்பர் மாதத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் வழிகாட்டல்களுக்கமைய இந்த மையம் நிறுவப்பட்டது. இந்த திருவிழாவின் முன்னணி ஆலோசகராக அவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. திரையரங்கு கலாசாரம் தொடர்பில் அவர் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். அவரின் நீண்ட கால ஆர்வத்தின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.” என்றார்.
நான்கு நாட்கள் முன்னெடுக்கப்படும் இந்த திருவிழா நிகழ்வில் கலை, கைவினைப் பொருட்கள், உணவு மற்றும் இதர தொடர்பாடல் பகுதிகள் போன்றவற்றைக் கொண்ட சந்தைப்பகுதி உள்ளடங்கியிருக்கும். திருவிழாவின் திரையரங்கு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த சந்தைப்பகுதி அமைந்திருக்கும் என குணவர்தன குறிப்பிட்டிருந்தார். நிகழ்வில் பங்கேற்போரை திரையரங்கு அனுபவத்துக்கு அப்பால் கொண்டு செல்லும் வகையில் முகத்துக்கு வர்ணம் தீட்டல், நேரடி ஓவியம் தீட்டல் மற்றும் திறந்த வெளி திறன் வெளிப்படுத்தல்கள் போன்ற அம்சங்களும் இந்த சந்தைப்பகுதியில் அடங்கியிருக்கும்.
நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கு ஆதரவளிக்கும் பிளாட்டினம் அனுசரணையாளர் காகில்ஸ், தங்க அனுசரணையாளர் மஹேஷ் மற்றும் ஷைலா அமலீன், வெள்ளி அனுசரணையாளர் NDB வெல்த், திருவிழா சந்தை அனுசரணையாளர் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றுக்கும் ஊடக பங்காளர்களுக்கும் குணவர்தன நன்றி தெரிவித்தார்.
இதர கலாசார நிகழ்வுகளைப் போல, இந்த திருவிழாவும் கொழும்பிலிருந்து இதர நகரங்களுக்கும் வியாபிக்க தாம் எதிர்பார்ப்பதாகவும், உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இந்த திருவிழா தொடர்பில் விழிப்புணர்வை கொண்டு செல்வதுடன், வருடாந்தம் இந்த நிகழ்வை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
KKF நிகழ்வுக்கான அனுமதி டிக்கட்களை திருவிழாவின் இணையத்தளத்திலும், BMICH இல் அமைந்துள்ள பதிவு அலுவலகத்திலும் ரூ. 3000 மற்றும் ரூ. 500 ஆகிய விலைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago