J.A. George / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
IDC இன் வருடாந்த தரவுக்கமைய, உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, 8.6 சதவீத சந்தைப் பங்கு மற்றும் 110 மில்லியனுக்கு அதிகமான சாதனங்களை ஏற்றுமதி செய்து, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்தாண்டினை விட 1% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த பொருளாதார சரிவையும் மீறி ஏற்றுமதியை அதிகரித்துள்ள முதல் ஐந்து ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் vivoஉம் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
vivo தற்போது சீன ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவில் மூன்றாவது இடத்தையும் கொண்டுள்ள அதே நேரத்தில் இந்தோனேசியாவின் சந்தையில் முன்னணியில் உள்ளது.
சீனாவை தலமையகமாகக் கொண்டுள்ள vivo , Shenzhen, Dongguan, Nanjing, Beijing, Hangzhou, Shanghai, Taipei, Tokyo மற்றும் San Diego ஆகிய இடங்களில் 9 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது. 5G, செயற்கை நுண்ணறிவு, தொழில்துறை வடிவமைப்பு, புகைப்படவியல் மற்றும் வரவிருக்கும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றது.
2020 ஆம் ஆண்டில் உலகளாவிய மொபைல் போன் சந்தை முன்னைய ஆண்டை விட 5.9% வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை IDC இன் தரவு காட்டுகிறது. எனினும் சந்தை மீட்சியை நோக்கிய முன்னேற்றம் சிறப்பாக உள்ளதுடன், 2021 ஆம் ஆண்டுக்கான பிரவேசம் வலுவாக இருக்கும் என்று IDC நம்புகிறது.
50 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago