2025 மே 19, திங்கட்கிழமை

மொபிடெலிடமிருந்து இலங்கை பொலிஸாருக்கு கமெராக்கள்

Editorial   / 2020 மே 05 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிஸாருக்கு உடலில் பொருத்தக்கூடிய அதிநவீன கமெராக்களை மொபிடெல் வழங்கியது. பொலிஸ் பார்க் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன்இ பொலிஸ் மற்றும் மொபிடெல் ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்திஇ அதன் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் கொவிட் - 19 பரவலைத் தடுப்பதற்காகவும் இலங்கை மக்களைப் பாதுகாத்திடவும் பலமணிநேரங்கள் சோதனைச் சாவடிகளை நிர்வகிக்கும் பொலிஸாரின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிஇ அவர்களுக்கு ஆதரவளித்திடும் வகையில் நிதி நன்கொடையொன்றை மொபிடெல் வழங்கியது. இப்பங்களிப்பானது சவாலான நேரத்தில் இலங்கையர்களுக்கு அதன் மாறுபட்ட டிஜிட்டல் ரீதியான சுகாதார மற்றும் சிறந்த மொபைல் அனுபவத்தினைப் பெற உதவுவதோடு, முப்படை மற்றும் சுகாதார துறையுடன் கூட்டிணைந்து செயற்படுவதன் மூலம் தேசத்தின் நெருக்கடியான காலகட்டத்தில் மொபிடெலின் உறுதியான அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X