Editorial / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல் பிரைவட் லிமிடெட், அதன் 4G LTE வலையமைப்பில் தற்போதுள்ள 900MHz ஸ்பெக்ட்ரம்களைப் புதுப்பித்ததன் மூலம் மேம்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சியானது, இலங்கையின் முதலாவது வலையமைப்பு வரிசைப்படுத்தல் என்பதோடு, இதன் மூலம், இலங்கையின் LTE வலையமைப்பு அதிகரிக்கப்பட்டள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால், இலங்கையில் முதன்மையான வலையமைப்பாக LTE Broadband மாறியுள்ளது.
மொபிடெல் தலைவர் பி. ஜி. குமரேசிங்க சிறிசேன கூறுகையில் “இலங்கையின் பரந்த மக்கள் தொகைக்கேற்ப, நகரத்துக்கு மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் இணைய வசதி சென்றடைவதன் மூலம், பொருளாதார முக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது, நீண்ட நாள் கனவாகக் காணப்பட்டது. இந்தக் கனவை நனவாக்க, இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷாமால் ஜயதிலக, இலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இடையில் உள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பினூடாக டிஜிட்டல் பாலத்தை நிர்மாணிப்பதற்கான மூலோபாய வழிகாட்டலை ஏற்படுத்தியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரியான நலின் பெரேரா கூறுகையில், “மொபிடெலின் தொனிப்பொருளான ‘We Care. Always’ என்பதற்கேற்ப மலிவு விலையில் தரமான மற்றும் குறைந்த அதிர்வெண் ஸ்பெக்ட்ரம் உள்ள 4G LTE தொழில்நுட்பம், அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதி செய்கின்றோம்” இலங்கையின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டின் கட்டமைப்பை அமல்படுத்துவதில் முன்னின்று செயற்படும் TRCSL பணிப்பாளர் நாயகத்துக்கு நன்றி தெரிவித்தார். இந்த ஒழுங்குமுறையானது, இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றத்துக்குத் தொலைத்தொடர்பு இயக்குநர்களிடமிருந்து மேலும் முதலீட்டை ஊக்குவிப்பதாக அமைகின்றது. இந்த இயல்பான வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் , சாத்தியமானத் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக மொபிடெலை முன்னிலைப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இலங்கையை உண்மையான முன்னேற்றத்திற்கு இட்டுச்செல்லும் என்பதோடு இலங்கைக்கான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்துசெல்ல வாய்ப்பாகவும் அமைகின்றது.
8 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago