2025 ஜூலை 23, புதன்கிழமை

‘மொபிடெல் காஷ் பொனான்ஸா 2018’ உடன் பல பரிசுகள்

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல் தமது காஷ் பொனான்ஸா திட்டத்தை 2018ஆம் ஆண்டில் புதுப்பித்துள்ளது. அதாவது, பல பெறுமதிமிக்க பரிசுகளுடன் மொபிடெல் காஷ் பொனான்ஸா இப்புதுவருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபிடெல் காஷ் பொனான்ஸா 2018 சலுகைகளில், பெறுமதிமிக்க Mercedes Benz கார்கள் உட்பட பல பரிசுகள் உள்ளடங்கியுள்ளன. 

நாளாந்தம் மற்றும் காலாண்டு ரீதியாகக் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டம்மிக்க மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 190 மில்லியன் பெறுமதியிலான பணப்பரிசுகளை வருடம் முழுவதும் வென்றிட முடியும். 220,000 நாளாந்த வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் வருடம் முழுவதும் வெல்லலாம். கடந்த ஆண்டுகளைப்போல இந்த முறையும், தமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு Mercedes Benz கார்களை வழங்க முன்வந்துள்ளது.  

காஷ் பொனான்ஸா என்பது மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கான ரீசார்ஜ் / பில்கள் கொடுப்பனவு சலுகைத்திட்டம் ஆகும். மொபிடெல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் ப்ரோட்பேன்ட் வாடிக்கையாளர்கள் இந்த மொபிடெல் காஷ் பொனான்ஸாவுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

ஒவ்வொரு ரூ. 50 பெறுமதியான முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு செய்பவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இதற்கு தனிப்பட்ட பதிவுச் செயன்முறை இல்லை. ஆனாலும், அனைத்து மொபிடெல் வாடிக்கையாளர்களும் இக்குலுக்கல் முறைப்போட்டிக்கு தகுதியுடையவர்கள் ஆவர். 

முற்கொடுப்பனவு இணைப்பை உடைய வெற்றி பெற்ற வாடிக்கையாளர்கள் அதே மதிப்புடைய அழைப்பு நேரத்தை மற்றும் DATA வை பரிசாகவும் மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்புடைய வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பிற்கொடுப்பனவு பட்டியலில் தள்ளுபடியும் பெற்றுக் கொள்ளலாம்.   

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் காஷ் பொனான்ஸா வெற்றிச்செயற்திட்டம், மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தந்தது. 24 வெற்றியாளர்களுக்கு இரண்டு வருடகாலத்துக்கு 24 சொகுசு மொன்டெரோ ஜீப்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

அதற்கு மேலதிகமாக இரண்டு வருட காலத்துக்கு 800,000க்கும் மேற்பட்ட அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மொபிடெல் வாடிக்கையாளர்கள் ரூ.700 மில்லியனை பெற்றுக்கொண்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .