Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016 இல் யுனிகோர்ன் டயர் ரிடிரெட் (பிரைவட்) லிமிட்டெட், விவசாய துறையில் பயன்படுத்தக்கூடிய டயர்களை மீள் நிரப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. நிறுவனத்தின் நவீன வசதிகள் படைத்த ரீபில்டிங் பகுதிகளான பனலுவ, வடரேக தொழிற்பேட்டை வலயத்தில் இந்த செயறபாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
புதிதாக ரீபில்ட் செய்யப்படும் டயர்கள் மேலதிக பிடிமானம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுள் காலத்தையும் கொண்டுள்ளன. விசேட இறப்பர் சேர்மானத்தை பயன்படுத்தி இந்த ரீபில்டிங் செயன்முறை முன்னெடுக்கப்படுவதுடன், விவசாயத்துறையில் மேலதிக பாதுகாப்பு மற்றும் அதிகளவு தூரம் பயணிக்கக்கூடிய திறனை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.
யுனிகோர்ன் டயர்கள் சந்தையில் 'வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சேவையுடன் சகாய விலையில் சிறந்த டயரை பெற்றுக்கொடுப்பது' எனும் தொனிப்பொருளில் அறிமுகம் செய்துள்ளன.
யுனிகோர்ன் டயர்கள் 13x28 Lug 20, 11/12x28 Lug 17and 20, 500x12, 600x12, 600x16 three line grip மற்றும் Jeep grip ஆகிய மாதிரிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. யுனிகோர்ன் விவசாய ரீபில்ட் டயர்களை நாடு முழுவதும் காணப்படும் டயர் விற்பனை நிலையங்களிலிருந்து கொள்வனவு செய்ய முடியும்.
யுனிகோர்ன் டயர் ரிடிரெட் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'யுனிகோர்ன் டயர்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு, தாம் செலுத்தும் பணத்துக்கு அதிகளவு பெறுமதியை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்' என்றார்.
'யுனிகோர்ன் கம்பனி புதிய வருடத்தில் இந்த புதிய ரக டயர்களை அறிமுகம் செய்ததன் மூலம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. குறிப்பாக விவசாய நடவடிக்கைகiளில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பெருமளவான செலவீனங்களை குறைக்கும் வகையில் இந்த விவசாய பயன்பாட்டுக்கான டயர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் எனும் வகையில், விவசாய செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது தேசிய சேவை என நாம் கருதுகிறோம். இந்த கொள்கையுடன் 2016 ஆம் ஆண்டை ஆரம்பித்துள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். 2014 இல் யுனிகோர்ன் கம்பனி தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. படிப்படியாக தனது செயற்பாடுகளை மேம்படுத்தியிருந்தது. குறுகிய காலப்பகுதியில் இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் துறையின் முன்னோடிகளுடன் போட்டியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. எனவே நாம் மேலும் பல புத்தாக்கமான தயாரிப்புகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஊக்குவிக்கப்பட்டுள்ளோம்' என்றார்.
யுனிகோர்ன் ரிடிரெட் டயர் (பிரைவட்) லிமிட்டெட்டை ஸ்தாபித்ததன் நோக்கம், உயர் தரம் வாய்ந்த மற்றும் நீடித்து உழைக்கும் தயாரிப்பை புதிய சர்வதேச தரங்களில் உள்நாட்டு வாகன பாவனையாளர்களுக்கு வழங்குவது ஆகும். மேலும், டயர் விநியோகஸ்த்தர்களுக்கு சந்தையில் முதலாவது மாற்று தயாரிப்புகளை விநியோகிக்கக்கூடிய வாய்ப்பை வழங்குவதாகவும் அமைந்திருந்தது.
47 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago