Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 07 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் பாங்க் ஒஃப் கொழும்பு பிஎல்சி (வங்கி) [Union Bank of Colombo PLC (UBC)] மற்றும் அதன் துணை நிறுவனங்கள் (குழுமம்) இணைந்து முன்னைய ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், மிகச்சிறந்த 117% அதிகரிப்புடன் 2016ஆம் ஆண்டில் வரிக்குப் பிந்திய இலாபமாக (PAT) ரூ. 553 மில்லியனைப் பெற்றுள்ளது. மற்றுமொரு மைல்கல் சாதனையாக குழுமமானது, மொத்த சொத்துகளில் ரூ. 100 பில்லியன் புள்ளியைத் தாண்டியுள்ளதுடன், வருட இறுதியில் ரூ. 100.5 பில்லியன் சொத்துக்களைப் பதிவுசெய்துள்ளது. சவால்மிகுந்த பெரும சூழலில், குழுமத்தின் இந்த குறிப்பிடத்தக்க செயற்றிறன் வெளிப்பாடானது, விரைவான வளர்ச்சிப்பாதையினை நோக்கிய குழுமத்தின் வினைத்திறன்மிகு வலுவான இலக்கினை வெளிப்படுத்துகின்றது.
வங்கியின் வலுவான செய்ற்றினானது, 103% YoY வளர்ச்சியினைப் பிரதிபலித்தவாறு வரிக்கு பிந்திய ரூ. 451.1 மில்லியன் இலாபத்தினைப் பெற்றுத்தந்துள்ளது. இது யூனியன் வங்கியானது, சில்லறை வங்கியியல், கூட்டாண்மை மற்றும் SME பரப்புகளில் வங்கி தமது பரந்த நோக்கினை செலுத்தியவாறு, முழுமையான வர்த்தக வங்கியாக வெற்றிகரமாக பரிணமித்ததுடன், முதலீட்டினை உற்பத்தித்திறனுடன் பயன்படுத்துவதற்கான உறுதியினை பூண்டமையே காரணமாகும். அதுமட்டுமன்றி, 2014ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வங்கியானது, குறிப்பிடத்தக்க முதலீட்டினை வங்கியினை பலப்படுத்தும் நோக்குடன் பயன்படுத்தியமை மற்றொரு காரணியாகும்.
வங்கியின் மொத்த சொத்துகள் ஆண்டு இறுதியில் ரூ.93,009 மில்லியன்களாக மாறியது. இது முன்னைய ஆண்டினை விட ஆரோக்கியமான 31% வளர்ச்சியினைப் பிரதிபலிக்கின்றது.
வங்கியின் முதன்மை வருமான ஆதாரமாக விளங்கும் வங்கியின் நிதியம் அடிப்படையிலான நடவடிக்கைகள், 2016ஆம் ஆண்டில் ரூ. 2,507 மில்லியன்களைப் பதிவுசெய்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24% அதிகரிப்பாகும். வட்டிகள் மீதான பரம்பல்களில் குறைவு இருந்த போதிலும், இது குறிப்பிடத்தக்க சாதனையாகும் வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள், வங்கியானது அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நாளிலிருந்து பெறப்பட்டதை விட முக்கிய மைல்கல் வளர்ச்சியினைப் பெற்றது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 38% வளர்ச்சியுடன் ரூ. 55,438 மில்லியன்களை பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
கடன்கள் மற்றும் முற்பணங்களின் தொகுப்பானது, வங்கியின் புதிய வினைத்திறன் நோக்குடன் இணைந்து மாற்றமடைந்துள்ளதுடன், சில்லறை வர்த்தக வங்கியியல் பங்கு ஆனது 11% ஆகவும் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago