Freelancer / 2025 ஒக்டோபர் 31 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கி 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சிறப்பாக செயலாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் UB Heroes விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் வங்கியின் தலைமையகத்தில் முன்னெடுத்திருந்தது.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வினூடாக, வியாபார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் கிளைகள் மற்றும் ஆதரவுப் பிரிவுகளின் சாதனைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கற்கள் போன்றன வெளிப்படுத்தப்படுவதுடன், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஊழியர்களின் திறமையான செயற்பாடுகளுக்கு வங்கியின் உபகாரம் தெரிவிப்பும் வெளிப்படுத்தப்படுகிறது.
வெற்றியாளர்களுக்கான விருதுகளை யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ வழங்கியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .