Editorial / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வட பிராந்தியத்தில் தனது வாகனத் தெரிவுகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, Hyundai லங்கா பிரைவட் லிமிட்டெட், AutoMaasters உடன் கைகோர்த்துள்ளது.

இதனூடாக யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் Hyundai வாகனங்களை விற்பனை செய்யும் அங்கிகாரம் பெற்ற விநியோகத்தராக AutoMaasters நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் பங்காண்மையுடன், Hyundai லங்கா பிரைவட் லிமிட்டெடினால், எரிபொருள் சிக்கனமான கார்கள் முதல், மத்தியளவிலான ஹாட்ச்பெக்ஸ் மற்றும் உயர் மட்ட SUV கள் மற்றும் புரட்சிகரமான ஹைபிரிட் வகை வாகனங்கள் கவர்ச்சிகரமான விலைகளில் விற்பனைக்குப் பிந்திய சேவைகளுடன் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்து கொள்ளலாம்.
இந்த நடவடிக்கை தொடர்பில் Hyundai லங்கா பிரைவட் லிமிட்டெடின் பணிப்பாளர் ஜுலியன் ரியுடர் கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தின் முன்னணி வாகன விநியோக உரிமையாண்மை பங்காண்மையுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த பங்காண்மையினூடாக, Hyundai லங்காவினால் நவீன வாகனத் தெரிவுகளைப் பரந்தளவு சமூகத்தாருக்கு சௌகரியமாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். எந்த வகையான வாகனமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்குச் சரியான மாதிரியை நாம் கொண்டுள்ளோம்.
மேலும், இந்தக் கைகோர்ப்புடன், யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கைப்பாணியை மேம்படுத்த நாம் எதிர்பார்ப்பதுடன், அவர்களின் நிதி இயலுமை அடிப்படையில் சிறந்த வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
அவர்களின் தேவைகள் மற்றும் கனவுகளைப் புரிந்து கொண்டு, சௌகரியமான லீசிங் பக்கேஜ்களை பெற்றுக் கொடுப்பதற்கும், சௌகரியமான மீளச் செலுத்தக்கூடிய திட்டங்களை வழங்கவும் நாம் கைகோர்த்துள்ளோம்” என்றார்.
உயர் தரமான விற்பனைக்கு பிந்திய சேவை மற்றும் நாடு முழுவதிலும் உதிரிப்பாகங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் Hyundai லங்கா பிரைவட் லிமிட்டெட் தொடர்ச்சியாக உள்நாட்டு மற்றும் பிராந்திய நிறுவனங்களுடன் நேர்த்தியான பங்காண்மைகளை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகிறது.
இதனூடாக பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் உதிரிப்பாகங்களை வாடிக்கையாளர்கள் இலகுவாக கொள்வனவு செய்யக்கூடியமை போன்ற விற்பனைக்கு பிந்திய சேவைகள் வழங்கப்படுகின்றன.
7 minute ago
16 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
58 minute ago