Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 10 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் தரம் வாய்ந்த வியாபாரச் செயன்முறைகள் மற்றும் செயற்பாடுகளைப் பின்பற்றி வருகின்றமையை கௌரவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் தேசிய வியாபார சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் விருதுகளை சுவீகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் 2017ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற நிகழ்வின்போது, இரு பெருமைக்குரிய விருதுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிவுசார் விருதுகளின் அடிப்படையில், காப்புறுதி பிரிவில் யூனியன் அஷ்யூரன்ஸ் இரண்டாமிடத்தை பெற்றிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்தாவது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் இந்தப்பிரிவில் துறையின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த வியாபார செயன்முறைகளை கௌரவிக்கும் வகையில், கூட்டாண்மை மேலாண்மைக்குரிய விருதுகளில் இரண்டாமிடத்தையும் யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யூனியன் அஷ்யூரன்ஸ் இந்த விருதைப்பெறும் நான்காவது தடவை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கௌரவிப்புகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான டேர்க் பெரெய்ரா கருத்துத்தெரிவிக்கையில், “இந்தப் பெருமைக்குரிய நிகழ்வில் கௌரவிப்பைப் பெறுகின்றமை உண்மையில் மகிழ்ச்சியான விடயம்.
நம்பிக்கை எனும் உறுதிமொழிக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் முன்னெடுத்து வரும் சௌகரியமான சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பேணி வருகிறமையும் இதனூடாக எமது வாடிக்கையாளர்களும் சகல பங்காளர்களும் நன்மதிப்புடன் நடத்தப்படுகின்றமையும் உறுதி செய்யப்படுகிறது” என்றார்.
30 வருட காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையில் தனது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், காப்புறுதித்துறையில் பல புத்தாக்கங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
140க்கும் அதிகமான பகுதிகளில் 4,500க்கும் அதிகமான கள விற்பனை அதிகாரிகளுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கும் இதர பங்காளர்களுக்கும் தனது சேவைகளை வழங்கி வருகிறது. நிறுவனத்தின் சிறந்த வியாபார செயன்முறைகள் மற்றும் உறுதித்தன்மை போன்றன இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
5 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago