Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
S.Sekar / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதில் தம்மாலான இயன்ற தியாகங்களைச் செய்கின்றனர். யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வர்த்தக நாம உறுதிமொழிக்கமைய, Sisumaga+ உடன் ஒவ்வொரு சிறுவருக்கும் தமது கல்வியை தொடர்வதற்கு தடங்கலற்ற பாதுகாப்பை வழங்குகின்றது.
Sisumaga+ என்பது பிரத்தியேகமான பாதுகாப்பு அடிப்படையிலான கல்விக் காப்பீட்டுத் திட்டமாக அமைந்துள்ளதுடன், பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் உயர்கல்விக்கான செலவை நிர்வகித்துக் கொள்ள உதவுகின்றது. தமக்கேற்ற வகையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய கல்வி நிதியத்தை வழங்குவதுடன், நிதியத்தின் மீதியின் மீது மாதாந்த பங்கிலாபங்கள் எனும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸினால் வருடாந்தம் வட்டி வீதம் செலுத்தப்படுவதுடன், முதிர்வின் போது 15% போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுவதனூடாக அந்த நிதியம் தொடர்ச்சியாக வளர்ச்சியடையும்.
சராசரி கல்விக் காப்பீட்டுத் திட்டத்துக்கு அப்பாலான Sisumaga+ இனால் காப்புறுதிதாரரின் (பெற்றோர்) துரதிர்ஷ்டவசமான எதிர்பாராத உயிரிழப்பின் போது, பிள்ளைகளின் உடனடி கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பாரிய தொகை வழங்கப்படுவதுடன், அந்தத் திட்டம் முதிர்வடையும் வரை கட்டுப்பணத்தை யூனியன் அஷ்யூரன்ஸ் செலுத்தி, நிதியத்தை கட்டியெழுப்பும். கல்வி உதவி கொடுப்பனவு எனும் மேலதிக அனுகூலத்தையும் இது வழங்குகின்றது. இதனூடாக காப்புறுதிதாரர் உயிரிழந்தது முதல் காப்புறுதித் திட்டம் முதிர்ச்சியடையும் வரை சிறுவர்களின் கல்விச் செலவுகளை ஈடு செய்யும் வகையில் மாதாந்தம் தொடர்ச்சியாக வருமானம் வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
22 minute ago
25 minute ago