2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் கிளை வலையமைப்பு விஸ்தரிப்பு

Editorial   / 2018 மார்ச் 29 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

30 வருட காலமாகச் சிறந்த சேவைகளை வழங்கி வருவதைக் கொண்டாடும் யூனியன் அஷ்யூரன்ஸ், தனது ஊழியர்கள், தீர்வுகள், செயன்முறைகள் போன்றவற்றில் தொடர்ச்சியாக தனது முதலீடுகளை மேற்கொண்டு வருவதனூடாக, தனது சகல பங்காளர்களின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கான உண்மையான பங்காளி நிறுவனமாகத் திகழ்கிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்குவதுடன், தரமான மற்றும் நியமமான சேவைகளையும் தான் இயங்கும் சுற்றுவட்டார பகுதிகளில் வழங்கி வருகிறது. நிறுவனத்தால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளைகளை நாடு முழுவதிலும் கொண்டிருப்பதுடன், முழு அளவிலான கிளை வலையமைப்பின் வலிமையை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்குகிறது.  

அண்மையில், யூனியன் அஷ்யூரன்ஸ் மூன்று புதிய கிளைகளைத் தனது வலையமைப்புக்குள் அறிமுகம் செய்திருந்தது. இதில் இரண்டு பிராந்திய அலுவலகங்களும் ஒரு கிளை அலுவலகமும் அடங்கியுள்ளன. இந்தப் புதிய கிளைகள் அனைத்தும், பிரத்தியேகமான, பசுமையான உள்ளக கட்டமைப்பைக் கொண்டிருப்பதுடன், பெருமளவு வாகனத் தரிப்பிட வசதிகளுடன் சௌகரியமான பகுதியில் அமைந்துள்ளன. ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கான சேவை பகுதிகள், ஊழியர்களுக்கான பயிற்சி நிலையம் உட்பட வாடிக்கையாளர்களுக்கான பல வசதிகள் போன்றன எப்போதும் வழங்கப்படும். யூனியன் அஷ்யூரன்ஸின் கிளை அலுவலகங்களினூடாக பரந்தளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகள் தனிநபர்களுக்கும் வியாபாரங்களுக்கும் வழங்கப்படுகின்றன. சகல யூனியன் அஷ்யூரன்ஸ் வாடிக்கையாளர்களும் விரைவாகவும் இலகுவாகவும் தொடர்பு கொள்ள முடியும்.   

மாஹோ பிராந்திய அலுவலகம் வைத்தியசாலை சந்தி, மொரகொல்லாகம வீதியிலும் நகர அலுவலகம் இல. 161/A, தர்மபால மாவத்தை, கொழும்பு 07 இலும்  வாரியபொல கிளை அலுவலகம் இல. 218, குருநாகல் வீதியிலும்  அமைந்துள்ளன.  

இலங்கையில் 30 வருட கால ஒப்பற்ற செயற்பாடுகளை கொண்டாடும் நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் முன்னெடுக்கின்றனர். உறுதியான மூலதன இருப்பு, மீள் காப்புறுதி, பங்காளர்களை உயர் தரப்படுத்தப்பட்ட சர்வதேச மீள்காப்புறுதி பங்காளர்களுடன் கொண்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .