2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வருடாந்த விருதுகள் 2017 நிகழ்வை கோலாகலமாக இந்தோனேசியாவில் முன்னெடுத்திருந்தது. களிப்பூட்டும் அம்சங்கள் நிறைந்த, மாபெரும் நிகழ்வாக இந்த விருதுகள் வழங்கும் வைபவம் இந்தோனேசியாவின், ஜகார்தா நகரிலுள்ள கிரான்ட் மேர்குரி ஹார்மொனி ஹோட்டலின் அண்மையில் நடைபெற்றது. பெருமளவு விருதுகள் வழங்கப்பட்ட முதலாவது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.  

ஜகார்தாவில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வை, இலங்கையிலுள்ள அனைவரும் கண்டு களிக்கக்கூடிய வகையில், சமூக ஊடக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.   

தனது விற்பனை அணி காண்பிக்கும் சிறப்பான செயற்பாடுகளைக் கௌரவிக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக, உயர் மட்டத்தில், விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இம்முறை மொத்தமாக 33 விருதுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், அதில் மிகவும் பெருமைக்குரிய, பிரதான விருதான ‘சம்பியன்களில் சம்பியன்’ விருது கெளும் ஜயசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்தது, 

மூன்றாவது தடவையாக, இந்தப் புகழ்பெற்ற விருது கெளும் ஜயசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப் பிரிவின் பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “ஆயுள் காப்புறுதித் துறையில், 30 வருடங்களுக்கு மேலாக யூனியன் அஷ்யூரன்ஸ் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்ப அம்சங்களைப் பின்பற்றுவதுடன், தரம் மற்றும் நியமங்களைப் பேணி வருகிறது. இதனூடாக, பல பிரிவுகளில் யூனியன் அஷ்யூரன்ஸ் தகைமைபெற்ற நிறுவனமாகத் திகழ்வதுடன், இலங்கையின் காப்புறுதித் துறையில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்துகிறது. அணியாக நாம், எமது விற்பனைச் செயலணியினரின் சிறந்த செயற்பாடுகளையிட்டு, மகிழ்ச்சியடைவதுடன், நிறுவனமாக, நாம் பயணிக்கும் சாதனையை நோக்கிய பயணத்துக்கு உதவியாக அமைந்துள்ளது. முழு யூனியன் அஷ்யூரன்ஸ் விற்பனைச் செயலணிக்கும், இந்த நிகழ்வு மிகவும் பெருமைக்குரிய அனுபவமாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .