Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலையினால் (UBSSE) முதலாவது செயற்திட்டமான தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சியை (NEDP), மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை முழுவதிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தொழில்முயற்சியாளர்களுக்கும், பொருத்தமான ஆரம்பநிலை சிந்தனைகளைக் கொண்டுள்ளவர்களுக்கும் வலுவூட்டும் வகையில் இந்த இணைந்த முயற்சி அமைந்திருப்பதுடன், தமது வியாபாரங்களை கட்டியெழுப்பிக் கொள்ளவும், விஸ்தரித்துக் கொள்ளவும் அத்தியாவசிய அறிவு மற்றும் திறன்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க குறிப்பிடுகையில், “நேபாளத்தின் CG Corp Global Group இன் Nabil Bank இன் வெற்றிகரமான திட்டமான NabilSSE இன் பிரகாரம் UBSSE முன்னெடுக்கப்படுகின்றது. இது CG Corp Global இன் முகாமைத்துவ பணிப்பாளரும், யூனியன் வங்கியின் பிரதி தவிசாளருமான நிர்வாணா சௌத்ரியின் சிந்தனை வெளிப்பாடாகும். இலங்கையின் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவது மற்றும் இலங்கையில் உறுதியான தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பை நிறுவுவது போன்றன அவரின் நோக்காக அமைந்துள்ளது. எமது சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்க நாம் எதிர்பார்க்கும் பெறுமதி சேர் அம்சமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், அவர்களுக்கு தமது வியாபார கொள்ளளவை திரட்டி, வளர்ச்சியை முன்னெடுக்க உதவியாக அமைந்திருக்கும். முக்கியமாக, யூனியன் வங்கிக்கு மாத்திரம் NEDP திறந்திருப்பது மட்டுமன்றி, பொது மக்களுக்கும் விரிவாக்கப்பட்டு, நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த தொழில்முயற்சியாளர்களுக்கு, இந்த பெறுமதி வாய்ந்த நிகழ்ச்சித் திட்டத்தினூடாக அனுகூலம் பெற வாய்ப்பை வழங்கும்.” என்றார்.
மூலோபாய விருத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாமமிடல், ஊழியர் சட்டம், வியாபார திட்டமிடல், கணக்கீடு மற்றும் நிதியியல், ஒழுக்கச் செயற்பாடுகள், புலமைச் சொத்து மற்றும் தலைமைத்துவம் போன்ற முக்கிய வியாபாரப் பிரிவுகளில் பரந்த பயிலல் அனுபவத்தை NEDP ஒன்லைன் பயிற்சிப் பட்டறை வழங்கும். பங்குபற்றுனர்களுக்கு நிபுணத்துவ வழிகாட்டல், தொடர்புகளை பேணும் பயிற்சிப்பட்டறைகள் மற்றும் நேரடி பயிற்சிகள் போன்றன வழங்கப்படும். அதனூடாக தொழில்முயற்சியாண்மை ஆற்றல்களை மேம்படுத்தவும், தமது வியாபாரங்களை விரிவாக்கம் செய்யவும் உதவியாக அமைந்திருக்கும். இந்த கற்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும்பட்சத்தில் சான்றிதழ் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகளுக்கு இதில் பங்கேற்க முடியும். NEDP இல் 200 பேருக்கு பங்கேற்கும் வாய்ப்புள்ளது. பங்குபற்றுனர்களுக்கு வியாபார வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை நாடு முழுவதிலும் கட்டியெழுப்புவதற்கு அவசியமான திறன்களை விருத்தி செய்து கொள்ள சிறந்த பிரத்தியேகமான வாய்ப்பாக இது அமைந்திருக்கும்.
மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் காணப்படுவதால், இந்த கற்கைக்கான விண்ணப்பங்களை மற்றும் ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago