2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

யூனியன் வங்கி வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 834 மில்லியனை பதிவு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் யூனியன் வங்கி, வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 251 மில்லியனை பதிவு செய்துள்ளதாகவும், இது 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 247% அதிகரிப்பாக அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. வங்கியின் ஐந்தொகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் மற்றும் மூலோபாய ரீதியான செயற்பாட்டு மேம்படுத்தல்கள் போன்றவற்றினூடாக இந்த துரித வளர்ச்சியை எய்த முடிந்திருந்தது.

 

வரிக்கு முந்திய இலாபம் 58% இனால் அதிகரித்து ரூ. 834 மில்லியனாக பதிவாகியிருந்தது. பிரதான வங்கிச் செயற்பாடுகள் மற்றும் துணை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட உயர்ந்த பங்களிப்புகள் போன்றவற்றை பிரதிபலிப்பதாக இது அமைந்திருந்தது.

 

லீசிங் மற்றும் அடகுச் சேவைகள் பிரிவுகளில் வளர்ச்சி மூலோபாயங்கள் பின்பற்றப்பட்டிருந்ததனூடாக, இக்காலப்பகுதியில் வங்கியின் தேறிய கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 100 பில்லியனை விட அதிகரித்திருந்தது. இதுவரையில் 24% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. விரிவாக்கம் வருமான வளர்ச்சியினூடாக நேரடியாக ஆதரவளிக்கப்பட்டிருந்ததுடன், உயர் கடன் அளவுகள் மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக ஆதரவளிக்கப்பட்டிருந்தது. அதனூடாக தேறிய கட்டண மற்றும் தரகு வருமானத்தில் 25% அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது.

யூனியன் வங்கி தேறிய மதிப்பிறக்க மீளத்திருப்பல் பெறுமதியாக ரூ. 23 மில்லியனை பதிவு செய்திருந்தது. மேம்படுத்தப்பட்ட கடன் தரம் மற்றும் வசூலிப்பு முயற்சிகள் இதில் பங்களிப்புச் செய்திருந்தன. வியாபார வளர்ச்சியுடன் தொழிற்பாட்டு செலவுகள் அதிகரித்திருந்ததுடன், மூலோபாய செயற்பாடுகளில் தொடர்ச்சியான முதலீடுகளினால் மொத்த தொழிற்பாட்டு வருமானம் 8% இனால் அதிகரித்திருந்தது. இதில் வட்டி-சாரா வருமானம் மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் ஆகியன பங்களிப்புச் செய்திருந்தன. வாடிக்கையாளர் வைப்புகள் ரூ. 108 பில்லியனை எய்தியிருந்தன. அதில் உயர் CASA விகிதமான 28.3% பங்களிப்புச் செய்திருந்தன. அதனூடாக மேம்படுத்தப்பட்ட வைப்புக் கலவை பதிவாகியிருந்தது. வங்கி உறுதியான மூலதன போதுமை மட்டங்களை பேணியிருந்ததுடன், மொத்த மூலதன போதுமை விகிதமாக (CAR) 13.65% ஐயும் Tier I CAR ஆக 12.64% ஐயும் கொண்டிருந்தது. இது ஒழுங்குபடுத்தல் வரம்புகளை விட உயர்ந்த நிலைகளில் பேணப்பட்டிருந்தன.

குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 171 பில்லியனாக உயர்வடைந்து, வங்கியின் உறுதியான நிதிசார் அடித்தளம் மற்றும் வளர்ச்சிப் பாதையை வெளிப்படுத்தியிருந்தது.

இக்காலப்பகுதியில் பிரதான செயற்பாட்டு விசேட அம்சங்களில், யூனியன் வங்கி Turbo Draft அறிமுகம் அமைந்திருந்தது. வாகன உரிமையாளர்களுக்கு துரிதமான மற்றும் சௌகரியமான தொழிற்படு மூலதன தீர்வை வழங்குவதாக இருந்ததுடன், கொஹுவல பகுதியில் புதிய லீசிங் மையமொன்றை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனூடாக, லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான நிதிசார் தீர்வுகளை அணுகும் வாய்ப்பு மேம்படுத்தப்பட்டிருந்தது. வங்கியினால் அதன் தலைமையகத்தில் “Trade Connect” எனும் நிலையம், வர்த்தக சேவைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகளினூடாக, தனிநபர் மற்றும் வியாபார வாடிக்கையாளர்களுக்கான வங்கியின் பெறுமதி மேம்படுத்தப்பட்டிருந்தது.

யூனியன் வங்கியின் தவிசாளர் தினேஷ் வீரக்கொடி குறிப்பிடுகையில், அண்மைக் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றியமைப்பு செயற்பாடுகளின் வினைத்திறன் மற்றும் வங்கியின் மீட்சித்தன்மை ஆகியவற்றை பிரதிபலிப்பதாக வங்கியின் நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. தமது வாடிக்கையாளர் இருப்பை விரிவாக்கம் செய்து நிலைபேறான வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு வங்கி உறுதியாக கவனம் செலுத்துகிறது என்றார்.

“2025 முதல் அரையாண்டில் நாம் பதிவு செய்துள்ள நிதிப் பெறுபேறுகளினூடாக, எமது வியாபாரத்தின் நேர்த்தியான போக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவளிக்கும் வகையில் நிலைபேறான ஐந்தொகை வளர்ச்சி மற்றும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் முகாமைத்துவத்தில் காண்பித்திருந்த ஒழுக்கமான வழிமுறைகள் அமைந்திருந்தன. டிஜிட்டல் வங்கியியலினூடாக பெறுமதியை ஏற்படுத்துவதிலும், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளில் எமது நோக்கிற்கு ஆதரவளிப்பதற்கான வியாபார செயன்முறை மீள-பொறியமைப்பு போன்றவற்றில் மூலதன செம்மையாக்கம் பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தது.” என யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X