2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது ஊழியர்களின் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிய உதவி

S.Sekar   / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது ‘Discover your Purpose’ (உங்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள்) செயலமர்வுகளின் மூலம், அதன் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் அடங்கலான ஒட்டுமொத்த ஊழியர்களும் தமது தனித்துவமான நோக்கத்தைக் கண்டறிய உதவியுள்ளதுடன், இது அதன் ஊழியர்கள், வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனத்தின் வெற்றியின் அத்திவாரமாக அமைந்துள்ளது.

தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக மக்கள் மீது நேர்மறையான செல்வாக்கினைச் செலுத்தும் வலிமை நோக்கத்திற்கு உள்ளது. சமீபத்திய ஆய்வுகள் மூலமாக, பணியில் தங்கள் நோக்கத்துடன் செயற்படுகின்ற ஊழியர்கள் அவ்வாறான நோக்கங்களைக் கொண்டிராத ஊழியர்களின் ஈடுபாட்டைக் காட்டிலும் நான்கு மடங்கு கூடுதலான ஈடுபாட்டு மட்டங்களைக் காண்பிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது (Mckinsey & Company). யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது நோக்கம் சார்ந்த செயலமர்வுகளை 2017 ஆம் ஆண்டில் ஆரம்பித்திருந்ததுடன், இது நிறுவனத்தின் உலகளாவிய மூலோபாயங்களான ‘Companies with purpose last’ (நோக்கத்தைக் கொண்ட நிறுவனங்களே நிலைபெற்றிருக்கும்), ‘Brands with purpose grow’ (நோக்கத்தைக் கொண்ட வர்த்தகநாமங்கள் வளர்ச்சி காண்கின்றன) மற்றும் ‘People with purpose thrive’ (நோக்கத்தைக் கொண்ட மக்கள் செழித்தோங்குகின்றனர்) ஆகியவற்றுடன் ஆழமாக வேரூன்றியுள்ளது. திறமைசாலிகள் மீது முதலீடு செய்வதற்கும், பணியிடத்தில் நோக்கத்துடனான நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாட்டிலிருந்து இவை தோற்றமடைகின்றன.

இந்த சாதனை குறித்து யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் மனிதவளத்துறை பணிப்பாளரான அனன்யா சபர்வால் கருத்து வெளியிடுகையில், யூனிலீவர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற எனது சிறந்த நாட்களில் ஒன்று 'னுளைஉழஎநச லுழரச Pரசிழளந' செயலமர்வில் கலந்து கொண்ட தருணமாகும். யூனிலீவர் நிறுவனத்தில், ஒவ்வொரு திறமைசாலியும் அவர்களின் தனிப்பட்ட நோக்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற தொழில், வளர்ச்சித் திட்டம் மற்றும் தலைமைத்துவ பாணியைக் கொண்டிருப்பதற்கு வலுவூட்டுவதே எங்கள் நோக்கம். நோக்கம் சார்ந்த ஒரு உணர்வு இந்த தொற்றுநோய் காலகட்டத்தை அமைதியான ஒரு பயணமாக மாற்றுவது மட்டுமல்லாமல், சிறந்த நல்வாழ்வுக்கான அதன் தொடர்பையும் எண்ணற்ற ஆய்வுகள் காண்பிக்கின்றன. இந்த அற்புதமான சாதனை இலக்கினை எட்டுவதற்கு அயராது உழைத்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா அறிவு மேம்பாட்டு அணியினருக்கும், அனுசரணை வழங்கிய 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் தனித்துவமான வல்லாதிக்கத்தைக் கண்டறிவதே நாம் ஒவ்வொருவரினதும் சுய விருத்தி மற்றும் வளர்ச்சிப் பயணங்களின் தொடக்கப் புள்ளியாகும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹஜார் அலஃபிஃபி கருத்துக்களை வெளிப்படுத்துகையில், 'மனிதனை வரையறுக்கும் இரண்டு தருணங்கள் வாழ்க்கையில் உள்ளன. அவர்கள் பிறந்த தருணம் மற்றும் அவர்கள் ஏன் பிறந்தார்கள் என்பதை தாம் உணர்ந்து கொள்ளும் தருணம் ஆகிய இரண்டுமே அவையாகும். நம்முடைய ஊழியர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களை எது தூண்டுகின்றது, ஏன் தூண்டுகின்றது என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டு, அவர்கள் வலுவானவர்களாகவும், நோக்கத்தின் அடிப்படையில் வழிநடத்தப்படுகின்றவர்களாகவும், எதிர்காலத்திற்கு பொருத்தமான தலைவர்களாகவும் தம்மைத் தயார்படுத்துவதற்கு பங்களிக்க முடிந்தமை எனக்குள் மிகுந்த நன்றியுணர்வை ஏற்படுத்துகின்றது.' என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .