Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2025 ஜூலை 04 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது ஆயுள் காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு மாபெரும் ரூ. 12.5 பில்லியன் போனஸ் கொடுப்பனவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
2006 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ. 116.6 பில்லியனை மொத்த வருடாந்த போனஸ் கொடுப்பனவாக வழங்கியுள்ளது.
தேசத்தின் உறுதியான மற்றும் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனர் எனும் வகையில் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் 2024 ஆம் ஆண்டுக்காக தனது ஆயுள் காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு மாபெரும் ரூ. 12.5 பில்லியன் போனஸ் கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் அதியுயர் வருடாந்த ஆயுள் காப்புறுதி போனஸ் கொடுப்பனவாக இது அமைந்துள்ளது. இந்த பிரகடனத்தினூடாக, 2006 ஆம் ஆண்டு முதல் காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள மொத்த போனஸ் கொடுப்பனவுத் தொகை ரூ. 116.6 பில்லியனாக உயர்வடையும்.
அதனூடாக வருடாந்தம் தொடர்ச்சியாக அதியுயர் போனஸ் கொடுப்பனவை வழங்கும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் நிறுவனத்தின் அசைக்க முடியாத சாதனை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார செயற்பாடுகள் மீட்சியை பதிவு செய்திருந்த ஆண்டில், ஒப்பற்ற மீட்சி மற்றும் நிதிசார் முன்னேற்றத்தை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் வெளிப்படுத்தியிருந்தது. நிறுவனத்தின் சொத்துகள் இருப்பு ரூ. 238.6 பில்லியனாக உயர்வடைந்திருந்ததுடன், தொழிற்துறையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி நிதியமான ரூ. 213.2 பில்லியனை தொடர்ந்தும் பேணியிருந்தது.
சராசரியாக, மாதமொன்றில் ரூ. 1 பில்லியனுக்கு அதிகமான தொகை முதிர்வு மற்றும் உரிமை வழங்கல்களாக செலுத்தப்பட்டிருந்ததுடன், வருடாந்த போனஸ் தொகைக்கு மேலதிகமாக மொத்தமாக சுமார் ரூ. 12.9 பில்லியன் தொகை செலுத்தப்பட்டது. அதனூடாக, நிறுவனத்தின் உறுதியான முதலீட்டு நிர்வாக மூலோபாயங்கள் மற்றும் காப்புறுதிதாரர் பாதுகாப்பில் ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியனவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
ஆறு தசாப்த காலத்துக்கு மேலாக ஜாம்பவானாக திகழும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், தனது வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்துள்ளதுடன், இலங்கையின் பல தலைமுறையினர் மத்தியில் ஆழமான நம்பிக்கையையும் கட்டியெழுப்பியுள்ளது.
பல்வேறு சவால்கள் எழுந்த போதிலும், 2024 ஆம் ஆண்டில் நிறுவனம் அதிசிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 30.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய கட்டுப்பண செலுத்தல்கள் ரூ. 26.3 பில்லியனாக பதிவாகி, 25மூ வருடாந்த வளர்ச்சியை எய்தியிருந்தது.
புதிய வியாபார கட்டுப்பணங்கள் 48மூ இனால் அதிகரித்து ரூ. 5.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது நிறுவனத்தின் வரலாற்றில் பதிவாகியிருந்த அதியுயர் பெறுமதியாகும்.
இந்த வெற்றிகரமான செயற்பாடுகளின் மையமாக, ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப்பின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறை அமைந்திருந்தது. நிறுவனத்தின் மூலோபாய முன்னுரிமைகளை தொடர்ந்தும் வழிநடத்துகிறது. அதிகரித்துச் செல்லும் சந்தைத் தேவைகளை புரிந்து கொண்டு, நிறுவனத்தின் பல்வேறு பொருத்தமான மற்றும் காலத்துக்கேற்ற காப்புறுதித் தீர்வுகள் 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
'Medi Champ' எனும் பல தலைமுறைகளுக்காக, சிக்கனமான சுகாதார காப்புறுதியினால், சர்வதேச வைத்தியசாலைகளில் அனுமதி, வெளிநோயாளர் சிகிச்சை காப்பீடு மற்றும் கட்டுப்பண விலக்கழிப்பு போன்ற பரந்த அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் 'Value Max' இனால், குறுகிய கால முதலீட்டுடன் இணைந்த பாதுகாப்பை நாடும் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த வருமதிகள் வழங்கப்படுகின்றன.
காப்புறுதிக்கு அப்பால் சென்று, ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ்;; லைஃப் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக அர்த்தமுள்ள பெறுமதியை சேர்த்த வண்ணமுள்ளது. மேம்படுத்தப்பட்ட லோயல்டி வெகுமதித் திட்டத்தினூடாக (Life Loyalty Rewards) நீண்ட கால காப்புறுதிதாரர்கள் பிரத்தியேகமான அனுகூலங்கள் மற்றும் விலைக்கழிவுகளை காப்புறுதி காலம் முழுவதிலும் அனுபவிப்பதை உறுதி செய்யப்படுகிறது.
டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளிலும் நிறுவனம் தொடர்ந்தும் தன்னை ஈடுபடுத்தி வருவதுடன், மேம்படுத்தப்பட்ட உயர் தொழினுட்ப கட்டமைப்புகளில் முதலீடுகளை மேற்கொண்டு, காப்புறுதி அணுகலை எளிமைப்படுத்துவதுடன், வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தி, உயர் சேவை அனுபவங்களை வழங்குகிறது.
'தந்தையும் தாயும் போன்று' எனும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது வாக்குறுதிக்கமைய, அரவணைப்பு மற்றும் பராமரிப்பில் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றுவதுடன், வியாபார செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று பரந்த சமூகங்களுக்கு பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. நிறுவனத்தின் செல்வாக்குச் செலுத்தும் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு (CSR) செயற்பாடுகள், நாட்டின் பல பகுதிகளைச் சென்றடைந்துள்ளன.
'சுப பெத்தும் புலமைப்பரிசில்' திட்டத்தினூடாக 1800 க்கும் அதிகமான மாணவர்களுக்கு வலுவூட்டப்பட்டுள்ளதுடன், ரூ. 200 மில்லியனுக்கு அதிகமான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. 'பாசல் பிரியத்த' திட்டத்தினூடாக, பின்தங்கிய 3300 பாடசாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கலாசார நிகழ்வுகளான பெரஹெராக்கள் மற்றும் பொசொன் பௌர்ணமி யாத்திரிகர் உதவிச் செயற்பாடுகளுக்கும் ஆதரவுகள் வழங்கப்படுகின்றன.
2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, இடர் முகாமைத்துவ நிலையத்துடன் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் கைகோர்த்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 1100 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வழங்கியிருந்தது.
கரிசனை, பாதுகாப்பு மற்றும் சமூக சேவை போன்ற செயற்பாடுகளினூடாக மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் இது போன்ற நிலைபேறான முயற்சிகளுக்காக, தொடர்ச்சியாக 8ஆவது வருடமாகவும் LMD இனால் 'அதிகம் விரும்பப்படும் ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமம்' எனும் கௌரவிப்பை ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் பெற்றுக் கொண்டது.
வர்த்தக நாமத்தின் வலிமையை மாத்திரம் இந்த கௌரவிப்பு பிரதிபலிக்காமல், மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்வுடன் ஆழமாக பொருத்தப்பாட்டை பேணுவதற்கும், பின்பற்றல் மற்றும் அரவணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான அதன் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025