2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையில் புதிய Gastrointestinal நிலையம் திறப்பு

S.Sekar   / 2021 ஒக்டோபர் 15 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், ராகம மெல்ஸ்டா வைத்தியசாலை அண்மையில் தனது சகல வசதிகளும் படைத்த Gastrointestinal நிலையத்தை திறந்துள்ளது. குடலுடன் தொடர்புடைய சகல நோய்களுக்கும் சிகிச்சையளிக்கும் வசதியைக் கொண்ட பிரத்தியேகமான நிலையத்தைக் கொண்ட இலங்கையில் முதலாவது தனியார் வைத்தியசாலையாக இது அமைந்துள்ளது.

முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான மெல்ஸ்டாகோர்ப் பிஎல்சியின் துணை நிறுவனமான மெல்ஸ்டா ஹெல்த் நிறுவனத்தின் அங்கமான ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையினூடாக நாட்டின் முன்னணி வைத்திய நிபுணர்களால் குடல்சார் மருத்துவ ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், அவர்களுக்கு உதவும் வகையில் சிறந்த பயிற்சிகளைப் பெற்ற தாதியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் காணப்படுகின்றனர்.

Gastrointestinal நிலையம் என்பது நவீன தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டுள்ளதுடன், நோயாளர்களின் நடமாட்டத்தைக் குறைத்து, சகல நோயாளர்களுக்கும் திருப்திகரமான அனுபவத்தை, அவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய சகாயமான கட்டணத்தில் வழங்குகின்றது. அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், வாய்வு, வீக்கம், வயிற்று வலி மற்றும் மலம் கழிக்கும் போது குருதி வெளியேறல் போன்ற குறைபாடுகளால் பலர் பாதிக்கப்படுகின்ற போதிலும், இந்த குறைபாடுகள் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணரத் தவறுகின்றனர்.

இவ்வாறான வசதியைக் கொண்ட சிகிச்சை நிலையமொன்றை மெல்ஸ்டா வைத்தியசாலை நிறுவியுள்ளதனூடாக, இலங்கையில் குடல்சார் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு காணப்படும் இடைவெளி மற்றும் தேவைப்பாடு போன்றன இனங்காணப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சிகிச்சைகளைப் பெறுவதற்கு அனைவருக்கும் கொழும்புக்கு விஜயம்  செய்ய வேண்டிய தேவையும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இலகுவாக இந்த சிகிச்சை நிலையத்தை அணுக முடியும்.

மெல்ஸ்டா வைத்தியசாலையின் நிறைவேற்று பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர். கே. தியாகராஜா இறைவன் கருத்துத் தெரிவிக்கையில், “கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களுடன் இணைந்து செயலாற்றுவதனூடாக அனைவருக்கும் பரிபூரண மருத்துவ பராமரிப்பை சகாயமான கட்டணங்களில் வழங்குவது மெல்ஸ்டா வைத்தியசாலையின் எதிர்பார்ப்பாகும். சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை ஆரம்பம், சிறுநீரகத் தொகுதியுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த சிகிச்சைகள்  மற்றும் தற்போது Gastroenterology போன்றன வைத்தியசாலையினால் குறுகிய காலப்பகுதியினுள் நிறுவப்பட்டுள்ள சிகிச்சைப் பிரிவுகளாக அமைந்துள்ளன. மெல்ஸ்டா வைத்தியசாலை உறுதியான வளர்ச்சியைப் பதிவு செய்வதுடன், சகல பிரிவுகளும் சகாயத் தன்மை மற்றும் தரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளன. இருதய சார் சிகிச்சைகள், இருதய சத்திரசிகிச்சை மற்றும் நரம்புமண்டல சத்திரசிகிச்சை போன்றவற்றை சர்வதேச அங்கீகாரத்துடன் விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன.” என்றார்.

ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அறிமுகங்களில் சிலதாக இவை அமைந்துள்ளன. தனது சிறுநீரக பிரிவை விஸ்தரிப்பதற்காக வைத்தியசாலை பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், அதனூடாக பரிபூரண, சகாயமான சிறுநீரகசார் மற்றும் லேசர் சத்திரசிகிச்சைகள் மற்றும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகள் போன்றன முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் புதிய வர்த்தக நாமத்தின் கீழ் நிறுவப்பட்டது முதல், மெல்ஸ்டா ஹெல்த் (பிரைவட்) லிமிடெட் தொடர்ச்சியாக இலங்கையின் மருத்துவ பராமரிப்புத் துறையில் சிறந்த தரங்களை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. சிறுநீரகத் தொகுதி மற்றும் மாற்று சிகிச்சை நிலையத்தை நிறுவியுள்ளதுடன், தற்போது gastrointestinal நிலையத்தையும் நிறுவியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .