2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரீலோட் பொறியிலிருந்து விடுதலை

S.Sekar   / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த எண்ணிக்கை 30.41 மில்லியனாகும். இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத்துறை  அபரிமிதமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. அதிலும் மனிதனின் தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்யும தொலைபேசிகள் தற்பொழுது மனித வாழ்க்கையின் இன்றியமையா அங்கமாகவே மாற்றம்பெற்றுள்ளது. இலங்கையில் தொலைபேசிகளில் வொய்ஸ் கோல்ஸ் மற்றும் இணைய சேவைகளை வழங்கும் பல தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் காணப்படுகின்றன.

நாட்டின் தொலைபேசி வாடிக்கையாளர்களில் பிற்கொடுப்பனவு (PostPaid) எண்ணிக்கையை காட்டிலும் முற்கொடுப்பனவு (Prepaid) வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும். இன்று வரையில் பெரும் எண்ணிக்கையிலான தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ரீலோட் திட்டங்களை பல வழிகளில் அறிமுகம் செய்துள்ளன. அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் பெரும்பான்மையானவை வாடிக்கையாளரின் ஏதேனும் ஓர் தனிப்பட்ட அல்லது சில தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யக்கூடிய கடும் நிபந்தனைகளுடனான கட்டண அறவீட்டு பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட பெக்கேஜ்களாகவே நிச்சயம் இருக்கும்.

இளைஞர் யுவதிகள், பணிகளில் ஈடுபடுவோர், வீட்டில் இருக்கும் பெற்றோர், வர்த்தகர் என அனைத்து தரப்பினருக்கும் தாங்கள் செலுத்தும் தொகைக்கு திருப்தியான சேவையை பெற்றுக் கொள்வதனை காட்டிலும் நிறுவனங்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் ரீலோட் திட்டத்தை தெரிவு செய்து அதில் பயன்பெற வேண்டிய நிர்பந்தமே இதுநாள் வரையில் காணப்பட்டது, இதனையே நாம் ரீலோட் பொறி என அடையாளப்படுத்த முடியும்.

எனினும், தற்போது உலகின் முதனிலை தொலைதொடர்பு சேவை வழங்குனர்களில் ஒன்றான எயார்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கு ஆராய்ந்து. அறிந்து அவர்களின் அனைத்து வகையான தேவைகளுக்கும் பொருந்தக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முதல் முறையாக இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. முற்கொடுப்பனவு கட்டண முறையில் புது முயற்சியாக இதனை அடையாளப்படுத்த முடியும்.

எயார்டெல் நிறுவனம், இலங்கை வாடிக்கையாளர்கள் சிக்கித் தவிக்கும் ரீலோட் பொறியிலிருந்து அவர்களை விடுதலை செய்யும் யுக்தியொன்றை முதல் முறையாக  அறிமுகம் செய்துள்ளது.

எயார்டெல் நிறுவனம் இலங்கையில் தனது 4G சேவையை அறிமுகம் செய்வதுடன் நாட்டின் தொலைதொடர்பு கட்டமைப்பில் புரட்சிகரமான ஓர் புதிய Freedom Packs என்னும் கட்டண முறைமையை அறிமுகம் செய்கின்றது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு ஒரு தடவை மட்டும் ரீலோட் செய்வது போதுமானதாகின்றது. எயார்டெல் நிறுவனத்தின் Freedom Packs 4G டேட்டா சேவையை இலங்கை வாடிக்கையாளர்களும் இனி பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிப்படையானதும், நிபந்தனைகள் குறைந்ததுமான இந்த Freedom Packs திட்டத்தின் கீழ் அடிக்கடி ரீலோட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு ரீலோட் மூலம் வொய்ஸ் மற்றும் டேட்டா ஆகிய இரண்டு வகை சேவைகளையும் பயனர்கள் தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடியினால் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நாட்டில் தற்பொழுது இணையத்தின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர் உள்ளீடுகளைக் கொண்டு எயார்டெல் நிறுவனம் பயனர்களுக்கு எளிமையான முறையில் சேவையை பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தற்பொழுது இணையப்பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொலைதொடர்பு பயனர்கள் எளிமையானதும் பெறுமதி வாய்ந்ததுமான சேவையை வழங்கும் நோக்கில் எயார்டெல் நிறுவனம் இந்த Freedom Pack திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எவ்வித கட்டுபாடுகளும் இல்லாத எயார்டெல் சேவைக்கு மாறுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்கின்றார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஸ் சந்திரா.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக மூன்று மில்லியன் ரீலோட் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சந்தையில் ரீலோட் அட்டைகள் எந்தளவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அழைப்புக்களுக்கும், டேட்டா பயன்பாட்டுக்கும் தனித்தனியாக விசேடமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்குகின்றன. மேலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக பயன்படுத்தும் நேரம், தரம், தெளிவு என இந்தப் பட்டியல் நீள்கின்றது. சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரு தனி பெக்கேஜ், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஒரு தனிப் பெக்கேஜ் என ஒவ்வொன்றுக்கும் நிபந்தனைகளுடனான பல்வேறு தனி பெக்கேஜ்களை சந்தையில் காண முடிகின்றது.

இதன் மூலம் வாடிக்கையாளர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு தாங்களுக்கு விருப்பமான ஓர் தெரிவினை அல்லது சேவையை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். அதாவது ஏதாவது ஓர் ரீலோட் பெக்கேஜை பெற்றுக் கொண்டால் இன்னும் பல விடயங்களை இழக்க நேரிடுகின்றது அல்லது அதற்காக தனித் தனியாக ரீலோட் செய்ய நேரிடுகின்றது. இதனையே நாம் ரீலோட் பொறி எனக் குறிப்பிடுகின்றோம்.

எயார்டெல் Freedom Pack மூலம் இந்த மரபு ரீதியான ரீலோட் பொறிக்குள் இருந்து மீள ஒர் அரிய சந்தர்ப்பம் உதயமாகியுள்ளது. ஒரு மாத காலத்திற்கே உரிய இந்த திட்டத்தில் ஒரு தடவை நீங்கள் ரீலோட் செய்தால் போதுமானது. உங்களது தொலைபேசியின் வொய்ஸ் கோல் மற்றும் டேட்டா பயன்பாடு குறித்த அனைத்துவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த எயார்டெல் Freedom Pack தொழிற்படுகின்றது. குறிப்பாக பாவனை தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. வழமையாக இலங்கையில் முற்கொடுப்பனவு முறையில் ரீலோட் செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர் சராசரியாக ஒரு மாதம் பயன்படுத்தும் பெறுமதியிலும் ஐந்து மடங்கு பெறுமதியான சேவைகளை இந்த ஒரே பெக்கேஜ் வழங்குகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X